SVS Bhagavad Gita simplified – Course details

ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கல்வி நிறுவனத்தாரால் நடத்தப்படும் “”ப4க3வத்கீ3தா’’ – அஞ்சல் வழிப்பயிற்சி
வகுப்புகளுக்கான பாடத்திட்டம்.

கல்வித் திட்ட இயக்குனர் : ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யர்

பகவத் கீதா ஒரு குடைக்கீழ் அடிநிலை தொடங்கி ஆழ்நிலைப் பயிற்சி.

இந்தப் பயிற்சி திட்டத்தில் ஆண் பெண் , இன , மத, தத்துவ பேதமின்றி யார் வேண்டுமானாலும் சேர்ந்து கற்கலாம்.

நான்கு பருவங்கள் (இரண்டு ஆண்டுகள்)

1. ப்ரஸ்தாநத்ரயம் பற்றிய விளக்கம்.

2. ப்ரஸ்தாநத்ரயத்தில் – பகவத்கீதை.

3. பகவத்கீதை தோன்றிய வரலாறு.
அ. மகாபாரதத்தில் கண்டுள்ளபடி.
ஆ. ஆராய்ச்சியாளர்கள் நோக்கில்.

4. பகவத் கீதைக்கு அமைந்துள்ள விரிவுரைகள் பற்றிய விளக்கம்.

5. ஆளவந்தாரின் கீதார்த்த ஸங்க்ரஹம். (ச்லோகங்களும் அவற்றிற்கான விளக்கங்களும்.)

6. ஸ்ரீ.உ.வே. மஹாவித்வாந் காஞ்சி. ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யரின் பகவத் கீதாஸார ஸங்க்ரஹம் அடிப் படையில் பகவத் கீதைக்கான விளக்கங்கள்.

7. 18 அத்யாயங்களுக்கும், தமிழ் எழுத்துக்களில் ச்லோகங்கள் மற்றும் பதவுரை, எம்பெருமானார் அருளிச்செய்த கீதாபாஷ்யம் – தமிழ் எழுத்துக்களில் – ஆங்கில மொழி பெயர்ப்புடன் – தமிழில் விளக்கத்துடனும் கூடியது. (தனிப் புத்தகம்)

8. கீதாபாஷ்யம், ஸ்ரீபாஷ்யம், வேதார்த்த ஸங்க்ரஹம் ஒருசார் ஒப்பாய்வியல் நோக்கில். (தனிப்புத்தகம்)

9. நாலாயிர திவ்யப்பரபந்தங்களில் காணப்படும் பகவத் கீதை மேற்கோள்களும், அதற்கான இயைபுகளும். (தனிப்புத்தகம்)

10. தென்னாசார்ய ரஹஸ்யக்ரந்தங்களில் கையாளப்பட்டுள்ள பகவத் கீதா ச்லோகங்களும், அதற்கான இயைபுகளும் – சரம ச்லோக விவரணம் தென்னாசார்ய ஆசார்யர்கள் மற்றும் நிகமாந்த மஹாதேசிகனின் ஆகியோருடைய விளக்கவுரைகள் (தனிப் புத்தகம்)

11. பகவத் கீதை அறிவுறுத்தும் வாழ்வியல் நெறிகள்.

12. பகவத் கீதை ஓர் நீதி இலக்கியம் – பகவத் கீதையும், திருக்குறளும் ஒப்பாய்வியல் நோக்கில்.

13. மறுமைக்கான வழிகாட்டி பகவத் கீதை.

14. பகவத் கீதா பாஷ்யத்தில் காணப்படும் உபநிஷத் கருத்துக்கள்.

15. ஆத்மா தன்னைத்தானே அனுபவித்துக் கொள்ளும் கைவல்ய மோக்ஷமும், கீதையில் தெளிவாக்கப்படும் கருத்துக்களும்.

16. கர்மயோகம், ஜ்ஞானயோகம், யோகாப்யாஸம், ஸந்நியாஸி தர்மம்(யதி தர்மம்) , பக்தி, பரபக்தி, பரமபக்தி, பரஜ்ஞானம் ஆகியவற்றிற் கான விளக்கங்கள் பகவத் கீதை வழி.

17. பகவத்கீதையிலிருந்து எடுத்தாளப்படும் கருத்தில் கொள்ளத் தக்க ச்லோகங்கள் மற்றும் அதற்கான விரிவுரைகள்.

18. தாத்பர்யசந்த்ரிகையின் அவதாரிகை மற்றும் சில குறிப்பட்ட பகவத்கீதா ச்லோகங்களுக்கு தாத்பர்யசந்த்ரிகையிலிருந்து விளக்கக் குறிப்புகள்.

19. அழகிய மணவாளச்சீயரின் பகவத்கீதை வெண்பா பற்றிய அறிமுகமும், சில குறிப்பட்ட பாடல்களுக்கான விளக்கக் குறிப்புகளும்.

20. பகவத் கீதையில் அமைந்துள்ள விசிஷ்டாத்வைத கோட்பாடுகள்.

21. ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகன் அருளிச் செய்த கீதார்த்த ஸங்க்ரஹம்.

22. சங்கர பாஷ்யத்தில் காணப்படும் சில கருத்துக்களுக்கு ராமானுஜ பாஷ்யத்தில் தெரிவிக்கப்படும் மறுப்புகள்.

24. பகவத் கீதா பாஷ்யமும், பறமத கண்டனமும்.

25. பகவத் கீதையும் மேலாண்மைக் கொள்கைகளும்.

26. வாழ்வியலில் காணப்படும் விவரிக்க இயலாத சில துன்பங்களுக்கும், மாறுபாடுகளுக்கும் பகவத்கீதை தரும் விளக்கங்கள்.

குறிப்பு: இந்த இரண்டு ஆண்டு பகவத் கீதை பயிற்சி முடிந்த பன்பு அன்றைய சூழ்நிலையைப்பொருத்தும், கீதாசார்யன் அருள் கொண்டும் பகவத் கீதை அவதரித்த குருக்ஷேத்திரத்திற்கு மங்களாசாஸன நிமித்தமாய் சென்று வர உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றிய விரிவான விளக்கங்கள் யாத்திரைக்கு முன்பு அறிவிக்கப்படும்.

இந்தப் பயிற்சி நான்கு பருவங்களைக் கொண்டது.ஒவ்வொரு பருவமும் நான்கு மாதங்கள் அளவைக் கொண்டது. ஒவ்வொரு பருவத்திற்கும் ஒரு நேர்முகப் பயிற்சி நடைபெறும். அவைமுறையே; சென்னை, ஸ்ரீரங்கம், அம்பாசமுத்திரம் அருகில் உள்ள மன்னார்கோயில் மற்றும் ஆளவந்தார் அருளிச் செய்த காட்டுமன்னார் கோயில் ஆகிய திருத்தலங்களில் நடைபெறும்.

நேர்முகப் பயிற்சி வகுப்புகள் இணையம் (ஆன்லைன்)’’ மூலமாகவும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

இந்த நான்கு பருவத்திற்கான பாடங்கள் பயிற்சி
வகுப்புகள் ஆகியவற்றிற்கான கட்டணம் ரூ.6000. இதை இரண்டு தவணைகளிலும் செலுத்தலாம். நேர்முகப் பயிற்சி வகுப்புகளுக்கான தனி கட்டணம் ஏதும் கிடையாது. இந்தப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெற விரும்புவோர்,

Payment may be made via Net Banking / IMPS / ATM card transfer ( Please do not deposit cash) or by At par payable cheque in favour of , A.Krishnamachari. ICICI. Srirangam, A/C No: 612501122817, IFS Code:ICIC0006125. Savings Account.

At par cheques may please be sent to Sri Vaishnava Sri A.Krishnamachari to the address : A.Krishnamachari, 214, East uthara street, Srirangam. Trichy – 620 006. Only voice , SMS Cell: 98842 89887,

Kindly remit the fees before 30.07.2020 and inform us after payment is made withpayment particulars .

Voice , SMS and Whatsapp 90424 53934, 92456 29526.

Any queries regarding the course call 9884289887 .

If required we can also share this information to your whatsapp number ( to be provided by you by sending message to 9042453934 whatsapp)

Adiyen Vasudevan for Sri Vaishnava Sri A.Krishnamachari swamy.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *