Questions for Ramanusar1000 Book

To download the Questionnaire in PDF format, please click here : Ramanujar1000_Part123_Contest_Questionnarie

ஸ்ரீ:
    மூன்று கேள்வித்தாள்களுக்குமான மொத்த மதிப்பெண் 980. இத்துடன் தெளிவான கையெழுத்திற்குப்  10 மதிப்பெண். ஆசார்யஸம்பந்தம் பெற்றோருக்கு 10 மதிப்பெண் கூடுதலாகக் அளிக்கப்படும். ஆக மொத்தம் 1000 மதிப்பெண்கள்.
    சில கேள்விகளுக்கு விடையளிக்கும் போது அந்தக் கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ள சொற்றொடர்களுக்கான நியதிக்கு  உட்பட்டுத்தான் விடையளிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் நீண்ட விடையளிப்போற்கு மதிப் பெண்கள் குறைக்கப்படும். இதைக் கருத்தில் கொண்டு விடைகளை அளிக்க முற்படுங்கள்.    

இராமாநுசர் ஆயிரம் – முதல் பாகம் – கேள்வித்தாள்

1. பரமபதநாதன் யாருக்கு என்ன கட்டளை இட்டார் அதன் பிறகு என்ன நடந்தது?                - 05
2. யாதவ பிரகாசன் என்பான் யார்? அவன் சொன்ன அவப் பொருள் யாது?                    - 05
3. ஆளவந்தார் அருளிச்செய்த க்ரந்தங்களின் எண்ணிக் கையை குறிப்பிடுக? அவர் அருளிச் செய்த க்ரந்தங்களில் மூன்றைக் குறிப்பிடுக?                - 05
4. “இந்த சரீரம் த்ருடமாய் ஆளவந்தாருடைய திருவருளும் அடியேனிடத்தில் பரிபூர்ணமாய் எம்பெருமானும் அடியேன் நினைத்தபடியே தலைக்கட்டினால் ஆளவந்தாரின் மூன்று குறைகளையும் தீர்க்கக்கடவேன்” இந்தச் சூளுரையை யார் எங்கே செய்தார். அதை எவ்வாறு அந்தச் சூளுரையைத் தலைகட்டினார்? (இருபது வரிகளுக்கு மேற்படாமல் விடை அளிக்கவும்)                        - 15
5. கோவிந்தஜீயரின் பூர்வாச்சரம பெயர் யாது. அவர் துறவறம் பூண்ட பிறகு எழுதிய நூலின் பெயர் என்ன?    - 05    
6. உடையவர் பெரிய பெருமாளுக்கு ‘குடிநீர்’ ஸமர்ப்பித் திடுவதற்கான ஏற்பாட்டை யாரைக்கொண்டு செய்தார்? அவ்வாறு செய்வதற்கான காரணம் யாது?        - 05
7. இராமாநுசருக்கு, ‘எம்பெருமானார்’ என்ற திருநாமத்தை யார் எங்கே சாற்றி மகிழ்ந்தார் அதன் பின்னணியை இருபது வரிகளில் விவரித்திடுக.                - 15
8. இராமாநுசருடைய திருமுடி ஸம்பந்தத்தால் அவருக்கு முன் தோன்றிய ஆசார்யர்களும், அவருடைய திருவடி ஸம்பந்த த்தால் அவருக்குப் பின் தோன்றிய ஆசார்யர்களும் உய்வு பெற்றனர் என்பதை எவ்வாறு நம் பூர்வாசார்யர்கள் நிலைநாட்டி உள்ளனர் என்பதை இருபது வரிக்குள் விவரித்திடுக.    - 10
9. அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருவடிகளில் யார் யாரை ஆச்ரயிக்கச் செய்தார். அப்போது அருளாளப் பெருமாள் எம்பெருமானார் சொன்ன வார்த்தை யாது?        - 05
10. திருவிருத்தம் 9வது பாட்டில் ஒரு ஐதிஹ்யம் குறிப்பிடப் பட்டுள்ளது. அதன் பின்னணியை இருபது வரிகளில் விவரித்திடுக.                 -10
11. ‘அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் ஆச்ரிதாநாம் ஸுசரணம் வந்தே அனந்தார்ய தேசிகம்’ என்ற இந்த தனியனை யார் யாரிடம் எங்கே கூறினார்?    - 05
12. ‘ஞானப்பள்ளப்பெண்’ கூறிய மறுமொழி யாது? இது எங்கே நிகழ்ந்தது?                    - 05
13. கோவிந்தப்பெருமாள் எம்பார் ஆன வைபவத்தை இருபது வரிகளில் விவரித்திடுக.                - 10
14. திருமாலிருஞ்சோலை பரமஸ்வாமியின் பெருமைகளை ஆழ்வார்கள் அருளிச்செயல் கொண்டு முப்பது வரிகளில் விவரித்திடுக.                        - 15
15. ‘இடமணித்து’ என்னும் அகத்துறை இலக்கியத்திற்கு உட்பட்ட பாடலைக் குறிப்பிடுக அதற்கான விளக்கத்தைத் தந்திடுக.                        - 05
16. “கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள் கூவுதல் வருதல் செய்யாயே” இந்தத் திருவாய்மொழி பாசுரச் சொற்றொடர் யாரால், எங்கே யாரிடம் சொல்லி விளக்கம் அளிக்கப்பட்டது?                     - 05
17. ‘போதாயன வ்ருத்திக்ரந்தத்தை’,  உடையவர் காண முடிந்ததா, அப்போது கூரத்தாழ்வான் கூறிய வார்த்தைகளை விவரித்திடுக.                        - 05
18. பிரமாணத்தின் லக்ஷணங்கள் யாவை?        - 05
19. திருப்பாவை பன்னிரண்டு மற்றும் பதினெட்டாம் பாசுரங்களுக்கு அமைந்துள்ள ஏற்றங்கள் பற்றி பத்து வரிகளில் விவரித்திடுக.                        - 05
20. ‘நம்குடி’ என்னாதே ‘தன்குடி’ என்று பெரிய திருமொழி 2-7-6ஆம் பாசுர உரையில் பெரியவாச்சான் பிள்ளை வெளிப்படுத்திடும் விளக்கத்தை விவரித்திடுக.    - 05
21. வங்கிபுரத்து நம்பியைக் கண்டு இராமாநுசர் அஞ்சிடக் காரணம் என்ன?                    - 05
22. திருவரங்கத்தில் சுப்பிரமணிய பட்டர் எழுப்பிய வினா என்ன? அதற்கு உடையவர் அளித்த மறுமொழி யாது?                             - 05
23. ‘தேவையிடாதவர்’ யார்? இராமாநுசர் அந்தத் தேவையிடாதவர் எழுந்தருளிய போது அருளிச் செய்த விளக்கம் யாது?                    - 05
24. இராமாநுசரை ஓர் ஏரியாக உருவகம் செய்தவர் யார்? அந்த ச்லோகத்தை அடிபிறழாமல் எழுதுக?            - 05
25. ‘பிரபத்தி அது எப்படி இருக்கும்’, இராமாநுசரின் இந்தக் கேள்விக்கு யார் யார் விளக்கம் அளித்தனர்?        - 15
26. இராமாநுசரைப் பெரியநம்பி எங்கே எப்போது தண்டனிட்டார்? அதற்கு இராமாநுசர் அளித்த விளக்கம் யாது?                             - 05
27. ‘இன்றியமையாமை’ என்ற அகஇலக்கியக் கோட்பாட்டை மேற்கோள் காட்டி இராமாநுசர் அளித்த விளக்கத்தை விவரித்திடுக.                        - 05
28. ‘ஸாமாநாதிகரண்யம்’ என்றால் என்ன பொருள்? அதன் அடிப்படையில் மூன்று திருவாய்மொழி பாசுரங்களுக்கு 30 வரிகளுக்கு மேற்படாமல் விளக்கம் அளித்திடுக.    - 15
29. கிடாம்பியாச்சானுக்கு அருளப் பாடிட்டு திருமாலிருஞ் சோலை மாயன் அருளிச்செய்த வார்த்தை யாது?    - 05
30. திருவரங்கத்தில் இராமாநுசர் முதலியாண்டானுக்கு அருளிச் செய்த பத்து வார்த்தைகளில் ஏதேனும் இரண்டு வார்த்தை களின் பொருளை விவரித்திடுக.            - 10
31. ‘ராமாநுஜ ஸ்பர்ச வேதி’ என்ற சிறப்பினைப் பெற்றவர் யார்? அதன் பின்புலத்தை பத்து வரிகளில் விவரித்திடுக.                     - 05
32. சோமாஸியாண்டானுக்கே அமைந்துள்ள ஏற்றம் யாது?, அவர் இராமாநுசரின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் இயற்றிய நூலின் பெயர் என்ன?        - 05
33. அனந்தாழ்வான் வைபவத்தை இருபது வரிகளில் விவரித்திடுக.                        - 10
34. வடுகநம்பிக்கே அமைந்துள்ள ஏற்றம் யாது? இருபது வரிகளில் விவரித்திடுக.                - 10
35. “அதுநமதுவிதிவகையே” திருவாய்மொழி 10-6-1 பாசுர விளக்கத்தின் போது நடந்த நிகழ்ச்சியினை இருபது வரிகளில் விவரித்திடுக.                        - 15
36. இராமாநுசரின் மருத்துவஇயல், வேளாண்இயல் பற்றிய சிந்தனைகளை இருபது வரிகளில் தொகுத்து தந்திடுக.- 10
37. “பூர்ணாய பூர்ண கருணா பாத்ராய அமிததேஜஸே மாலாதர ப்ரியாயாஸ்து யதிராஜாய மங்களம்” இந்த ச்லோகத்திற்கான பொருள் யாது?            - 05
38. “திருப்பாவைக்கு யார் பொருள் சொல்ல வேண்டும்? யார் கேட்க வேண்டும்” என்ற கேள்விக்கு இராமாநுசர் அளித்த பதில் யாது?                        - 05
39. திரிபுராதேவியார், ‘நீங்கள் ஏன் சிவனை வழிபடுவது இல்லை’ என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு என்ன பதில் அளித்தார்?                        - 05
40. “துடுப்பிருக்க கை வெந்து போகலாமோ” இடம் சுட்டி பொருள் விளக்குக?                    - 05
41. ஒவ்வொரு நாள் இரவும் இராமாநுசர் கண்களிலிருந்து கண்ணீர் வெள்ளமிடும் என்று ராமாநுஜார்ய திவ்ய சரிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது அதற்கான காரணம் யாது?    - 05
42. “தத்யதா இஷீகதூலம் அக்நௌப்ரோதம் ப்ரதூயேத ஏவம் ஹாஸ்ய ஸர்வேபாப்மாந: ப்ரதூயந்தே” இந்த வாக்கியம் எந்த உபநிஷத்தில் அமைந்துள்ளது?, இதன் பொருளை வெளிப்படுத்தும் திருப்பாவை பாசுரத்தைக் குறிப்பிடுக?                        - 05
43. “செஞ்சொற்கவிகாள் உயிர்காத்து ஆட்செய்மின்” என்ற திருவாய்மொழி 10-7-1 சொற்றொடர்க்கு இராமாநுசர் தந்த விளக்கத்தினை விவரித்திடுக.                - 05
44. சரணாகதி பற்றி பிள்ளை உறங்காவில்லி தாஸர் எழுப்பிய கேள்வியையும் அதற்கு உடையவர் தந்த விடையையும் இருபது வரிகளில் விவரித்திடுக.            - 10
45. இடம் சுட்டிப் பொருள் வரைக.            - 15
(ச்) ராமாநுஜமுநிர் ஜீயாத் யோ ஹநேர் ப4க்தியந்த்ரத: ந
    கலிகோலாஹலக்ரீட3õ முத4õக்3ரஹமபாஹரத் நந
(ஞ) யதிபரிப்3ருடே4õ யத்3கீ3தாநாம் அத3ர்†யத3ஞ்ஜஸா
    நிக3மபரிஷந்நேதீ3யாம்ஸம் ஸுத4õமயமா†யம்  ந
    ஜநநபத3வீயாதாயாதƒரமாபஹராம் தி4யம்
    ஜநயது ஸ மே தே3வ: ஸ்ரீமாந் த4நஞ்ஜய ஸாரதி2: நந
(ஞி) லக்ஷ்மீபதேர் யதிபதேƒச த3யைகத4õம்நோ:
    யொ(அ)ஸௌ புரா ஸமஜநிஷ்ட ஜக3த்3தி4தார்த்த2ம் ந
    ப்ராச்யம் ப்ரகா†யது வ: பரமம் ரஹஸ்யம்
    ஸம்வாத3 ஏஷ †ரணாக3திமந்த்ரஸார: நந
46. ‘திருமலைஒழுகு’ வழி திருமலையில் இராமாநுசர் மேற்கொண்ட சீர் திருத்தங்களை 30 வரிகளுக்கு மேற்படாமல் தந்திடுக.                        - 20
47. திருவரங்கத்தில் உடையவர் ஆண்டு திருநக்ஷத்திர உத்ஸவத்தில் நடைபெறும் பொலியன் சிறப்பினை இருபது வரிகளில் விவரித்திடுக.                - 20
48. திருவரங்கத்தில் ஒவ்வொரு ஸப்தாவரணத்தன்றும் நம்பெருமாள் உடையவர் ஸந்நிதிக்கு எழுந்தருளுவது ஏன்?, அப்போது நடைபெறும் வைபவத்தை 10 வரிகளில் விவரித்திடுக.                        - 05
49. ஆழ்வான் தாம் அருளிச் செய்த நூல்களில் எம்பெருமானாரை பல்வகையிலும் கொண்டாடி உள்ளார் அவற்றைத் தொகுத்துத் தருக.            - 10
50. ‘ஐம்பத்திருவர்’ என்று எந்த திவ்யதேசத்து கைங்கர்ய பரர்களுக்கு பெயர் அமைந்துள்ளது அவர்களைப் பற்றிய கல்வெட்டுச் செய்திகளை இருபது வரிகளுக்கு மேற்படாமல் விவரித்திடுக.                         - 10
முதல் பாகம் கேள்வித்தாள் முற்றும்.
***
இராமாநுசர் ஆயிரம் – இரண்டாம் பாகம் – கேள்வித்தாள்
1.    விஜ்ஞாபநம் யதி3த3மத்3ய து மாமகீநம்
    அங்கீ3குருஷ்வ யதிராஜ த3யாம்பு3ரா÷† ந
    அஜ்ஞோண்யம் ஆத்ம கு3ணலே† விவர்ஜிதƒச
    தஸ்மாத் அநந்ய †ரணோ ப4வதீதி மத்வா    ந ந  
    இந்த ச்லோகம் எந்தத் துதி நூலில் அமைந்துள்ளது இதை அருளிச்செய்தவர் யார் அந்த நூலின் திரண்ட பொருளை இருபது வரிகளில் விவரித்திடுக.                     – 20
    2. ‘இராமாநுச நூற்றந்தாதிக்கு’ அமைந்துள்ள ஏற்றம் யாது? இருபது வரிகளில் விவரித்திடுக.                – 10
3. ‘யதிராஜ ஸப்ததி’ 31 வது ச்லோகத்தின் பொருளைக் விவரித்திடுக.                        - 05
4. ஆந்திர பூர்ணர் என்று கொண்டாடப்படுபவர் யார்?, அவர் அருளிச்செய்த துதி நூலின் பெயர் என்ன? இவரைப்பற்றிய குறிப்பு ஸ்ரீவசனபூஷணம் எத்தனையாவது நூற்பாவில் காணப்படுகிறது?                    - 05
5. தத்3 ப4 õஷ்யமாத3 õய நித4 õய முர்த்4 நி
   ஸ்ரீப4 õஷ்யமேதத்3 வரப4 õ ஷ்யக்ருத் த்வம் ந
   இதீவ தஸ்மை ப்ரத3 தெ3ள ச தே3வீ
   ப4 õஷ்யம் ஹயக்3 ரீவமபி ஸ்வதே3 வம் நந    
இந்த ச்லோகம் எந்தத் துதிநூலில் அமைந்துள்ளது அதன் பொருள் யாது?                    - 05
6. ‘எதிராசரந்தாதி’ என்ற நூலை இயற்றியவர் யார்?, அதில் எத்தனை பாடல்கள் அமைந்துள்ளன?        - 05
7. ‘யாதவாத்ரிச்ருங்கே’ என்ற விளி யாரைக் குறிக்கும்? அந்தச் சொற்றொடர் எந்த நூலில் அமைந்துள்ளது அந்த நூலை இயற்றியவர் யார்? அதன் பெயர் என்ன?        - 05    
8. ஸ்ரீபாஷ்ய மாலிகிதும் ஆக்த விசாலலேக்யா:
    ஸ்ரீவத்ஸசிஹ்ந குருரானத திவ்யகாத்ர:ந
   வேதாந்த ஸூத்ரமபி வக்தும் அமுஷ்ய ஸர்வம்
   உத்திஷ்ட லக்ஷ்மணமுநே தவ ஸுப்ரபாதம்நந
    இந்த ச்லோகம் எந்தத் துதிநூலில் அமைந்துள்ளது இதன் பொருள் என்ன?                    - 05
9. புரா ஸூத்ரைர் வ்யாஸ: ƒருதி †த ‡ரோர்த்த2ம் க்3ரதி2தவாந்
   விவவ்ரே தம் ƒராவ்யம் வகுளத4ரதாம் ஏத்ய ஸ புந: ந
    உப4õவேதௌ க்3ரந்தெ2ள க4டயிதுமலம் யுக்திபி4ரஸௌ
   புநர் ஜஜ்ஜேராமாவரஜ இதி ஸ ப்3ரஹ்மமுகுர: நந        
    இந்த முக்தக ச்லோகம் யாரால் இயற்றப்பட்டது, பொருள் என்ன?                    - 05
10. ‘தத்வத்ரயத்தில்’ பிள்ளைலோகாசார்யர் 34வது நூற்பாவில் ப்ரஹ்மஸூத்ரம் ஒன்றை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அந்த ஸூத்ரத்தின் பொருளை ‘வேதாந்தஸாரம்’ கொண்டு விவரித்திடுக?                        - 05
11. ‘தத்வத்ரய’ நூற்பா 133இல் ‘ஆகாசேசாவிசேஷாத்’ என்ற ப்ரஹ்ம ஸூத்ரத்தை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அந்த ஸூத்ரத்தின் பொருளை ‘வேதாந்தஸாரம்’ கொண்டு விவரித்திடுக?                        - 05
12. ‘ஆசார்ய ஹ்ருதயத்தில்’ கிளி பூவை குயில் மயில் என்று குறிப்பிடப்படுவோர் யாவர்?                - 05
13. ‘ஆசார்யபதமென்று தனியே ஒரு பதம்; அதுள்ளது எம்பெருமானாருக்கே யாய்த்து” இவ்வாறு அறுதியிட்டது யார்?                                - 05
14. “கோயிலும் ப4õஷ்யகாரரு மிருக்க இங்கே †ரீராவஸான மாவதே” என்று பெறுக்க, “ஒரு ப4õக3வதனுடைய மடியிற் காட்டில் கோயில் உத்க்ருஷ்ட மன்று” என்று அருளிச் செய்தார். இந்தச் சொற்றொடர்கள் எந்த நூலில் காணப் படுகின்றன இதை யார் யாரிடம் எங்கே சொன்னார்?            - 05
15. சரணாகதி சாஸ்திரத்தைப் பற்றி பாஷ்யகாரர் தம்முடைய வேதாந்த விசார நூல்களில் குறிப்பிடாமல், கத்யத்திரயத்தில் குறிப்பிட்டதற்கான காரணங்களைப் பெரியவாச்சான் பிள்ளை குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு எங்கே குறிப்பிட்டுள்ளார்? நீங்கள் அறிந்தவாறு அதனை பத்து வரிகளுக்குள் விவரித்திடுக.                          - 10
16. ‘சதுச்லோகி’ என்ற க்ரந்தத்தை யார் அருளிச் செய்தார் அதற்கு அமைந்துள்ள விவரணங்கள் யாவை?    - 05
17. ‘குருபரம்பராஸாரம்’ என்ற க்ரந்தத்தை அருளிச் செய்தவர் யார்?. அதன் இறுதியில் அமைந்துள்ள பாடலைப் அடிபிறழாமல் எழுதுக.                - 05
18. ஸ்ரீமத் ரஹஸ்த்ரயஸாரத்தின் எந்த அதிகாரத்தில் எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளுவதற்கு முன்பு அருளிச்செய்த வார்த்தைகளை ஸ்ரீதேசிகன் குறிப்பிடுகிறார் அந்த வார்த்தைகளை விவரித்திடுக?            - 10
19. பாகவத அபசாரம் பல்வகைப்பட்டிருக்கும். எம்பெருமானார் தம்முடைய அந்திமதசையில் அவற்றை வரிசைப்படுத்துள்ளார். அவற்றில் நான்கினை நீங்கள் குறிப்பிட்டு அவற்றை தவிர்ப்பதற்கு நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளை, உள்ளது  உள்ளபடி இருபது வரிகளுக்கு மேற்படாமல் எழுதவும்.                - 15
20. இடம் சுட்டிப் பொருள் தருக.            - 10
(அ ) ஸமஸ்த சிதவித்வஸ்து சரீராயாகிலாத்மநே ஐ
    ஸ்ரீமதே நிர்மலா நந்தோதந்வதே விஷ்ணவே நம: ஐஐ
(ஆ)   ப்ரக்ருஷ்ட கு3ணபூர்ணாய ப்ராப்யாய ஸ்வாங்க்4ரி ஸேவி நாம்ஐ
    ப்ரபந்ந ஸார்த்த2 வாஹாய யதிராஜாய மங்க3ளம் ஐஐ
21. ஸ்ரீராமானுஜ வைபவம் என்ற நூலை எழுதியவர் யார்?, அந்த நூலில் எத்தனை தலைப்புகளில் அமைந்துள்ளன.     - 05
22. ‘யதிராஜ விஜயம்’ என்ற நூலில் எத்தனை அங்கங்கள் அமைந்துள்ளன? இந்த நாடகத்தின் கதாநாயகன் பெயர் என்ன? இந்த நாடகத்தில் வரும் ரங்கப்பிரியன், ப்ரியரங்கன் ஆகிய கதாபாத்திரங்கள் யாரைக் குறிப்பிடுகின்றனர். இந்த நாடகத்தை இயற்றியவர் யார்?            - 05
23. ஸம்ஸ்கிருத நூலான ‘திவ்யஸூரிசரிதத்தில்’ இராமானுசர் வைபவம் எத்தனை ஸர்க்கங்களில் பேசப்படுகிறது. அந்த நூலில் காஞ்சீபுரத்தில் இராமாநுசர் பாடம்படித்துக் கொண்டிருந்த போது ப்ரம்மரக்ஷஸ் யாரைப் பீடித்திருந்ததாகக் குறிப்பிடுகிறார்?                    - 05
24. ‘ப்ரபந்நாம்ருதம்’ என்ற நூலை இயற்றியவர் யார்? அதில் எத்தனை அத்தியாயங்களில் இராமாநுசர் வைபவம் பேசப்படுகிறது?                    - 05
25. ‘இவ்வாத்மாவுக்கு ஆசார்யன் ஒருவனோ பலரோ என்று எச்சான், தொண்டனூர் நம்பி, அனந்தாழ்வான் ஆகியோர் உடையவரிடம் கேட்ட விளக்கத்திற்குக் கிடைத்த பதில் என்ன என்பதை 20 வரிகளக்கு மிகாமல் விவரித்திடுக? இந்த நிகழ்ச்சி எந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது?            - 15    
26. ஓர் இரவு திருவீதியிலே சென்று கொண்டிருக்கும்போது பட்டருக்கு எம்பார் சொன்ன வார்த்தைகளைத் தொகுத்துக் கூறுக.                            - 05
27. ‘திவ்யஸூரிசரிதம்’ என்ற தமிழ் நூலை இயற்றியவர் யார்? அதில் எத்தனை பாடல்கள் அமைந்துள்ளன?    - 05
28. பகவானும் ஆசார்யத்வத்தை ஏறிட்டுக்கொள்வதற்கான காரணங்களை அவன் திருவாக்கலே கூறியதாக ஸ்ரீபாஞ்சராத்ரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது அதன் தொகுப்பை 20 வரிகளுக்கு மேற்படாமல் விவரித்திடுக?        - 15
29. “ஸ்ரீராமாநுஜரின் திருவடியிணைகளின் ஸம்பந்தம் பெற்றிருக்கையால், ஸ்ரீரங்கநாதனாகிற திருமகள் கேள்வன் என்னை ஆதரித்துப் பெரும் பேறுகளை வழங்கினானன்றோ: ஸ்ரீரங்கநாதனின் தேவியான ஸ்ரீரங்கநாயகி, அதைக்கண்டு “இவன் ஸ்ரீராமாநுஜரின் திருவடி ஸம்பந்தம் பெற்றவன்” என்று என்னிடம் தன் கருணையைப் பெருகவிட்டா ளன்றோ” என்று யார் அருளிச் செய்துள்ளார்? அதன் பொருளை 10 வரிகளுக்கு மிகைப்படாமல் விவரித்திடுக?                         - 10
30. “ய: ஸ்ரீலக்ஷ்மணயோகி3வர்யசரணத்3வந்த்3வா ƒரயீ  நாப4வத்
           தஸ்யாத்யந்தத3யாதி3ஸத்3கு3ணநிதி4ர்நாராயண: ஸ்ரீபதி: ந
           த3õதும் முக்திமநாத3ரோ ப4வப்3ருஹத்3வரா†யே ஸந்ததம்
           நிக்ஷிப்யைவ ஹ்ருத4õபி நோ க3ணயதி ப்ராக்ஸித்3த4 கர்மேரித: நந
    இந்த ச்லோகத்தின் திரண்ட பொருள் என்ன? இந்த ச்லோகத்தை அருளிச் செய்தவர் யார்?        - 05
31.“அஸ்மிந்நர்த்தே2ஹி விƒவாஸஸ் ஸர்வேஷாம் ந ஜநிஷ்யதி ந
         மத்கடாக்ஷோ ப4வேத்3யஸ்மிந் மய்யேவ ப்ரவணோ ஹி ய: நந
         தஸ்ய தஸ்ய ஹ்ருதி3ஸ்தே3õயம் ப4விஷ்யதி ந ஸம்†ய:நந”
    என்ற ஸ்ரீபாஞ்சராத்ர ச்லோகத்தின் பொருள் என்ன?    - 05    
32. ‘யதீந்த்ரப்ரவணப்ரபாவம்’ என்ற நூலை இயற்றியவர் யார்? இவர் அருளிச் செய்த மற்ற ஐந்து நூல்களைக் குறிப்பிடுக?                        - 05
33.“யஸ் ஸ்வாபகாலே கருணாகரஸ்ஸந்
      பவிஷ்யதாசார்ய பரஸ்வரூபம் ந
      ஸந்தர்சயா மாஸ மஹாநுபாவம்
      தம் காரிஸூநும் சரணம் ப்ரபத்யே நந
    இந்த ச்லோகத்தை யார் யாரிடம் எங்கே விண்ணப்பம் செய்தார்? இதற்கான பொருள் யாது?            - 05
34. அழகியமணவாளப்பெருமாள் நாயனாருக்கு திருவாய் மொழிப்பிள்ளை இட்ட இறுதி ஆணையை விவரித்திடுக?    - 10
35. இந்த உடம்போடு இனியிருக்கப் போகாதுதான்
    செங்கமலத்தாள்கள் தன்னைத் தந்தருள் நீ-அந்தோ
    மையார் கருங்கண்ணி மணவாளா! தென்னரங்கா!
    வையாமல் இருப்பாயே இங்கு.
    இந்தப் பாடல் எந்த நூலில் அமைந்துள்ளது? யார் அருளிச்செய்தது?                    - 05    
36. திருமழிசை அண்ணா அப்பங்கார் தம்முடைய ‘பழநடைவிளக்கம்’ என்னும் நூலில் எம்பெருமானார் காலத்தில் இருந்த சாத்தாத முதலிகளை வரிசைப் படுத்தியுள்ளார்? அவர்களின் திருநாமங்களைத் தொகுத்துக் கூறிடுக?             - 05
37. ‘கிருமிகண்டசோழன்’ யார் என்பதைப் பற்றிய  கருத்தை முப்பது வரிகளில் பிராமணங்களின் அடிப்படையில் விவரித்திடுக?                         - 15
38. இராமானுசரின் சமுதாயச் சிந்தனைகளை நீங்கள் அறிந்த வகையில் முப்பது வரிகளுக்கு மேற்படாமல் தந்திடுக?- 15
39. திருவரங்கம் பெரிய கோயிலில் இராமாநுசர் மேற்கொண்ட சீர்திருத்தங்களில் ஐந்தினை விவரித்திடுக.        - 15
40. எம்பெருமானார் என்ற திருநாமம் ஸ்ரீரங்கத்தில் காணப்படும் கல்வெட்டுகள் ஒன்றில் காணப்படுகின்றது. அந்த கல்வெட்டு எண் என்ன?            - 05
41. திருவரங்கத்தில் உடையவர் ஏற்படுத்தி வைத்த அருளிச்செயல் ஸேவாக்ரமத்தை இருபது வரிகளுக்கு மிகைப்படாமல் விவரித்திடுக.            - 15
42. ராமாநுஜாங்க்ரி †ரணோஸ்மி குலப்ரதீப:
     த்வாஸீத் ஸ யாமுநமுநேஸ் ஸ ச நாதவம்ச்ய: ஐ
     வம்ச்ய: பராங்குச முநேஸ் ஸ ச ஸோபி தேவ்யா:
     தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவேக்ஷணீய: ஐஐ
    இந்த ச்லோகத்தை யார் யாரிடம் எங்கே விண்ணப் பித்தார்?                        - 05
43. இராமப்பிரியர் செல்வப்பிள்ளையானது எவ்வாறு? இருபது வரிகளுக்கு மிகைப்படாமல் விவரித்திடுக.        - 15
44. நியமனப்படியில் முதல் கொத்தான அர்ச்சகர்களின் பணி எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது என்பதை இருபது வரிகளுக்கு மிகைப்படாமல் விவரித்திடுக.            - 15
45. திருப்பாவைக்கும் இராமாநுசருக்கும் இடையே அமைந்துள்ள தொடர்பினை இருபது வரிகளுக்கு மிகைப் படாமல் விவரித்திடுக.                - 15
46. “இன்றோ எதிராசர் இவ்வுலகில் தோன்றியநாள்
இன்றோ கலியிருள் நீங்கும்நாள்?”            
இந்தப் பாடல் வரிகளை யார் அருளிசெய்தார். இதன் பின் இரண்டு வரிகளைப் யார் பூர்த்தி செய்தார். இந்த நிகழ்ச்சி எங்கே எப்போது நடந்தது?                    - 05        47. இதுவோ பெரும்பூதூர். இங்கே பிறந்தோ
     எதிராசர் எம்மிடரைத் தீர்த்தார்? – இதுவோதான்
     தேங்கு பொருநல் திருநகரிக்கு ஒப்பான
     ஓங்கு புகழுடைய ஊர்?
இந்தப் பாடலை யார் எங்கே அருளிச் செய்தார்.    - 05
48. வாக்யத்வயம், ஸ்ரீசடகோபத்வயம், ஸ்ரீராமாநுஜ த்வயம், பாத்த்வயம் ஆகிய நான்கில் எந்தத்வயம் உயர்ந்தது. அந்த த்வயங்களை எழுதிடுக.                - 05
49. திருக்கோட்டியூர் நம்பி திருவடிகளில் இராமாநுசர் கேட்டது திருமந்த்ரத்தின் பொருளையா அல்லது சரமச்லோகத்தின் பொருளையா? ஸ்ரீமணவாள மாமுனிகளின் திருவுள்ளக் கருத்து யாது?                        - 05
50. ‘யதிராஜவிம்சதி’ என்ற நூல் எந்த ஊரில் இயற்றப்பட்டது. அப்போது பாகவதோத்தமர்கள் கொண்டாடியது ஒரு பாடலாக உருவெடுத்தது அதனை அடிபிறழாமல் எழுதுக?     - 10
இரண்டாம் பாகம் கேள்வித்தாள் முற்றும்.
***
இராமாநுசர் ஆயிரம் – மூன்றாம்  பாகம் – கேள்வித்தாள்
1. பராசரரும் பாராசர்யரும் ஒரே வ்யக்தியா அல்லது வெவ்வேறு வ்யக்திகளா?                 - 3            
2. உபநிஷத்துக்களாகிற திருப்பாற் கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தது யார்?                - 3
3. ஸ்ரீபாஷ்யம் என்றால் என்ன பொருள்?        - 3
4. ப்ரஹ்மஸூத்ரங்களின் எண்ணிக்கை விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தின்படி எத்தனை?            - 3
5. அதிகரணம் என்றால் என்ன? ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தப்படி ப்ரஹ்மஸூத்ரத்தில் எத்தனை அதிகர ணங்கள் அமைந்துள்ளன?                - 3
6. ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தப்படி ஜகத்காரணன் யார்? – 3
7. பூர்வமீமாம்ஸா சாஸ்த்ரம் எத்தனை அத்தியாயங்கள் கொண்டது? அதை இயற்றியவர் யார்? அவருக்கும் வேத வியாஸருக்கும் அமைந்துள்ள தொடர்பு யாது?     - 3
8. உத்தர மீமாம்ஸா சாஸ்த்ரம் என்றால் எதைக் குறிக்கும்? அதை இயற்றியவர் யார்?                - 3
9. ‘பலாத்யாயம்’ என்று குறிப்பிடுவது சாரீரக மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் எத்னையாவது அத்தியாயம்?        - 3
10. ஸ்ரீபாஷ்யத்திற்கு அமைந்துள்ள தனித்தன்மை யாது?                         - 3
11. பேதச்ருதி, கடகச்ருதி, அபேதச்ருதி என்றால் என்ன பொருள்?                        - 3
12. வேதாந்த வாக்கியங்கள் எத்தனை வகைப்படும்? அவற்றின் பெயரை எழுதுக?            - 3
13. ஸித்தத்விகம், ஸாத்யத்விகம் என்றால் எந்தெந்த அத்யாயங்கள் குறிப்பிடுகின்றன?            - 3
14. ஸமந்வயாத்யாயம், அவிரோத்யாயம், ஸாதநாத்யாயம் ஆகியவை ப்ரஹ்ம ஸூத்ரத்தின் எந்தந்த அத்தியாயங்களைக் குறிக்கும். அதற்கான காரணங்கள் யாவை?        - 3
15. ப்ரஹ்ம ஸூத்ரத்தில் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் எத்தனை பாதங்கள் அமைந்துள்ளன?            - 3
16. முதல், இரண்டு, மூன்று, நான்கு அத்தியாயங்களில் அமைந்தள்ள அதிகரணங்களின் எண்ணிக்கையை குறிப்பிடுக.        - 5
17. அவ்வாறே முதல், இரண்டு, மூன்று, நான்கு அத்தியாயங்களில் அமைந்தள்ள ஸூத்ரங்களின் எண்ணிக்கையை குறிப்பிடுக.                - 5
18. ‘சதுஸூத்ரி’ என்று அழைக்கப்படும் முதல் நான்கு ஸூத்ரங்கள் யாவை?                    - 3
19. முதல் அத்தியாயம் இரண்டாம் பாதம் எதைத் தெரிவிக்கின்றது?                    - 3
20. ப்ரஹ்மஸூத்ரத்தின் முதல் மற்றும் இறதியான ஸூத்ரங்களை எழுதிடுக?                - 3
21. “பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி” இது எந்த உபநிஷத்தில் அமைந்துள்ள வாக்கியம்?                - 3
22. ஜந்மாத்யதிகரணத்தில் (1-1-2) பூர்வபக்ஷிகளின் மூன்று பக்ஷங்கள் குறிப்பிடப்படுகின்றன அவை யாவை?    - 5
23. ‘சாஸ்த்ர யோநித்வாத்’ என்னும் ஸூத்ரத்தில் (1-1-3) ‘யதோவா இமாநி’ என்று தொடங்கும் தைத்திரீய உபநிஷத்து வாக்கியத்தின் பொருள் எவ்வாறு விளக்கப்படுகிறது. பூர்வபக்ஷியின் ஆக்ஷேபத்திற்கு எவ்வாறு பதில் உரைக்கப் படுகிறது?                        - 5
24. 1-1-18 ஸூத்ரத்தின் திரண்ட பொருள் என்ன?    - 5
25. வேதாந்தஸாரத்தில் பொருள் விவரிக்கப்படும் ஐந்து வெவ்வேறு உபநிஷத்து வாக்யங்களை எடுத்து எழுதவும்?                        - 5
26. பூர்வபக்ஷி தன் கொள்கைக்கு சாதகமாக குறிப்பிடும் மூன்று வேதவாக்யங்களை எடுத்து எழுதவும்?        - 3
27. த்ரமிடாசாரியர் அருளிச் செய்த எந்த விளக்கத்தை எந்த ஸூத்ரத்தில் பாஷ்யகாரர் விவரித்துள்ளார்?        - 3
28. 1-1-29 ஸூத்ரத்தில் ஒரு உபநிஷத்திலிருந்து கதை ஒன்று மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளது? அதை விவரித்திடுக.                        - 5
29. த்வஷ்டாவின் குமாரனுக்கு எத்தனை தலைகள் இருந்ததாக கூறப்படுகிறது?                    - 3
30. முதல் அத்தியாயம் முதல் பாதத்தில் அமைந்துள்ள அதிகரணங்களை வரிசைப்படுத்திக?            - 5
31. வேதாந்தஸாரத்தில் குறிப்பிடப்படும் ஐந்து ரிஷிகளின் பெயரைக் குறிப்பிடுக.                - 5
32. ஸாங்க்ய மதத்தை பரப்பியவர் யார்?        - 3
33. வேதத்தின் பொருளை விளக்க வந்த மற்றைய சாஸ்திரங்கள் யாவை?                        - 3
34. யோகசாஸ்திரத்தை பரப்பியவர் யார்? அதை வைதிகர்கள் பிரமாணமாக கொண்டுள்ளார்களா?            - 3
35. கணாத, அக்ஷபாத, க்ஷபணக ஆகிய ஸ்மிருதிகளை வைதிகர்கள் பிரமாணமாகக் கொண்டுள்ளார்களா?    - 3
36. ‘ப்ரஹ்மத்திற்கு விசித்திர சக்தி உண்டு’ என்பதை எவ்வாறு நாம் அறிய முடியும்?                    - 3
37. கனவில் நாம் காணும் பொருள்களையும் மனிதர்களையும் யார் படைக்கிறார்கள்?                    - 3
38. ‘அஸமஞ்ஜஸம்’ என்றால் என்ன பொருள்?    - 3
39. ‘ஸமவாயம்’ என்ற ஸம்பந்தத்தை யார் முன் வைக்கிறார்கள்?                    - 3
40. பௌத்தர்களின் மதக் கொள்கை எவ்வாறு வேதாந்தஸாரத்தில் தள்ளப் படுகிறது?        - 6
41. இறந்த உடலை விட்டு நீங்கிய ஆத்மா கர்மங்கள் கழிந்தவாறே எவ்வாறு மாதாவின் கருப்பையை அடைகிறான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன?             - 5
42. 3-2-26 ஸூத்ரத்தில் பிரஹ்மமே பிரபஞ்சமாக ஆகிறது என்பதை எவ்வாறு உதாஹரணம் காட்டி நிரூபித்துள்ளார் ஸ்ரீபாஷ்யகாரர்?                     - 10
43. ‘தஹரவித்யை’, எந்த உபநிஷத்தில் கூறப்பட்டள்ளது? ‘அபஹதபாப்மா’ என்ற சொல்லிற்கு என்ன பொருள்?- 3
44. ‘பிராணவித்யை’, எந்தெந்த உபநிஷத்துகளில் விவரிக்கப் பட்டுள்ளன?                        - 3
45. ‘சாண்டில்யவித்யை’, எந்த உபநிஷத்தில் விவரிக்கப் பட்டுள்ளது?                        - 3
46. ‘புருஷ வித்யை’, எந்தெந்த உபநிஷத்துகளில் விவரிக்கப் பட்டுள்ளது?                        - 3
47. ‘உத்கீதவித்யை’ எந்த உபநிஷத்தில் குறிப்பிடப்படுகிறது?                 - 3
48. யாகத்தில் இரண்டு வகைகள் உண்டு அவை யாவை?                         - 3
49. ‘அக்நி பரிசர்யையை விட்டவன் ஸந்ததியை கொன்றவன் ஆவான்’ என்பது யாருடைய கொள்கை?        - 3
50. பரமாத்மாவை எந்த கதியில் சென்று அடையலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன?                 - 3
குறிப்பு: எந்த ஆசார்யனிடம் ஸமாச்ரயணம் செய்து கொண்டார் என்பதையும், அந்த ஆசார்யனின் தனியனையும் எழுதுபவருக்கே கூடுதல் பத்து மதிப்பெண் அளிக்கப்படும்.
***

Bhattar Vaibhavam in a Nutshell

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

பட்டர் வைபவம்
1. ஸ்ரீபராசரபட்டர் என்னும் ஆசார்யரது திருநக்ஷத்ர உத்ஸவம் வைகாசி அனுஷ நக்ஷத்ரத்தில் கொண்டாடப் படுகிறது.(28-5-2010)
2. ஆசார்ய பரம்பரையில் இராமாநுசருக்குப் பிறகு எம்பாரும், அவருக்குப்பிறகு ஆழ்வானின் புத்திரரானான ஸ்ரீபராசரபட்டரும் அலங்கரித்து வந்தனர்.
3. ஸ்ரீபராசரபட்டர் விபவத்தில் இராமாவதாரத்திலும், அர்ச்சையில் பெரியபெருமாளிடத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
4. கூரத்தாழ்வானுக்கு இரண்டு குமாரர்கள் நம்பெருமாளது அரவணை ப்ரசாதத்தின் ப்ரபாவத்தாலே அவதரித்தனர்.
5. கூரத்தாழ்வானுக்கு இரட்டைப் பிள்ளைகள் திருவவதரித்த தினம்-சுபகிருத் வருடம் வைகாசி மாதத்தில் பௌர்ணமி திதியும் அனுஷ நக்ஷத்திரமும் கூடிய புதன்கிழமையாகும்.
6. நம்மாழ்வாரது திருவாய்மொழி முதலிய திவ்யப்பிரபந்தங்களின் அர்த்த விசேஷங்களை உள்ளபடி உணர்ந்து வெளியிட வல்லவரானவர் இவர் என்பதற்கு அறிகுறியாக, இவரது திருவவதாரம் அந்த ஆழ்வாருடைய திருஅவதார தினமாகிய வைகாசி விசாகத்திற்கு அடுத்ததாக அமைந்தது என்னலாம்.
7. ஸ்ரீரங்கநாதன் இளங்குழந்தைப் பருவத்திலேயே பட்டரைத் தமது புத்திரனாக அங்கீகரித்துத் தம்முடைய சந்நிதியிலே திருமணத்தூணின் அருகே தொட்டிலில் இடுவித்து ஸ்ரீரங்கநாச்சியாரும் தாமுமாகச் சீராட்டி வளர்க்க, அங்ஙனம் வளர்கிற அக்குழந்தை தவழ்ந்து சென்று, பெருமாள் அமுது செய்வதற்குத் திருமுன்பே கொணர்ந்து சமர்ப்பிக்கப்படுகிற   அடிசிலைக் கைகளால் அள்ளி அளைந்து துழாவ, பெருமாள் அதுகண்டு உகந்தருளி “அமிழ்தினுமாற்றவினிதே தம்மக்கள், சிறுø கயளாவியகூழ்” என்றபடி அந்த இன்னடிசிலை மிகவும் பிரியமானதாக அங்கீகரித்து அருள்வாராம்.
8. இப்படி ஸ்ரீரங்கநாதன் தம்மை அபிமானித்துப் புத்திரஸ்வீகாரஞ் செய்தருளப் பெற்ற பாக்கியம் பெற்றமையால், பட்டர் “ஸ்ரீரங்கநாதபுத்ரர்” எனப்படுவார்; வானிட்ட கீர்த்திவளர் கூரத்தாழ்வான் மகிழ வந்த தேனிட்டதார் நம்பெருமாள் குமாரர்…. பட்டர் (திருவரங்கக் கலம்பகம் – காப்புச்செய்யுள்) என்று பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் கூறியுள்ளார்.
9. பட்டர் ஐந்தாவது பிராயத்தில் ஒருநாள் திருவரங்கம் பெரிய கோயில் திருவீதியிலே புழுதி அளைந்து விளையாடுகிற போது, அநேக சாஸ்திரங்களில் வல்லவனான ஒரு வித்வான் ‘ஸர்வஜ்ஞபட்ட’னென்று பட்டப் பெயர் வைத்துக் கொண்டு அங்ஙனமே தன் பெயரைக் குறிப்பிட்டு ‘ஸர்வஜ்ஞபட்டர்’ வந்தார் என்பது முதலாகத் தன் பரிஜநங்களைக் கொண்டு விருது சொல்லி எக்காளம் ஊதுவித்துக் கொண்டு அதிக ஆடம்பரத்துடனே சிவிகை மீது வர, அதுகண்ட பட்டர், உடையவர் கூரத்தாழ்வான், முதலியாண்டான், அருளாளப் பெருமாள் எம்பெருமானார், எம்பார் முதலான பலபெரியோர்கள் எழுந்தருளியிருக்கிற இவ்விடத்திலே ஸர்வஜ்ஞ பட்டனென்று பெரும் பெயர் சொல்லி விருதூதிப் பல்லக்கேறி வருகிறான் இவன் யாரடா? என்று எண்ணித் தாம் அவன் எதிரில் சென்று கையிற் புழுதியை அள்ளியெடுத்து அவனைநோக்கி நீ ஸர்வஜ்ஞனன்றோ? இது எவ்வளவு? சொல், பார்ப்போம் என்று வினவினார்.
10. அவன் அதனைக் குறித்து அதிதீர்க்காலோசனை செய்தும் அது இத்தனையென்று தெரியாமையால், ஒன்றும் விடை சொல்ல மட்டாதே வெட்கத்தால் தலை கவிழ்ந்து மௌனத்தோடு நின்றிட்டான். பட்டர் அவனைப் பார்த்து இது ஒரு கைப்பிடிமண் என்று சொல்லி நீ கொண்ட பெயரைப் பொருளுள்ளதாக நிலை நிறுத்தி ஸர்வஜ்ஞன் என்ற விருதை மெய்ப்பித்துக் கொண்டு போக மாட்டாதே அஜ்ஞனாய் விட்டாயே! இனி உன்னுடைய விருதும் மற்றைய சின்னங்களும் எதற்காக? என்று ஏசி எக்காளம் முதலியவற்றைப் பறியுங்கள் என்று தம்முடன் விளையாடும் சிறுவர்களுக்குக் கூறினார்.
11. ஆழ்வான் தாமே பட்டர்க்கு வேத சாஸ்த்ரங்களைக் கற்பிக்க, எம்பார் பஞ்சஸம்ஸ்கார பூர்வமாக மந்திரங்களையும் அவற்றின் அர்த்தங்களையும் உபதேசிக்க, இவ்விருவரும் திருவாய்மொழி முதலிய திவ்வியப்பிரபந்தங்களையும் அவற்றின் வியாக்கியானங்களையும் சொல்லியருள, பின்பு பட்டர் ஆழ்வானிடமிருந்து ஸ்ரீபாஷ்யத்தை உபதேச க்ரமமாகப் பெற்று உபயவேதாந்தப் ப்ரவர்த்தகராய் விளங்கினார்.
12. இங்ஙனமிருக்கையில் ஒரு நாள் ஸ்ரீபாஷ்யகாரர் பட்டருடைய வேதாந்த உபந்யாஸ வைபவத்தைக் கேட்டு உகந்து அவர்க்கு வேதாந்தாசார்யர் என்ற சிறப்புப் பெயரைக் கொடுத்தருளினார்.
13. பிறகு எம்பெருமானார் திருமேனி தளர்ந்தவராய்ப் பரம பதமடையத் திருவுள்ளமாகி அடியார்கள் அனைவரையும் அழைத்துப் பட்டரைக் காட்டிக் கொடுத்து இவரை நம்மைப் போலவே பார்த்துக் கொள்ளுங்கள் என்று நியமித்துப் பட்டரைப் பெரிய பெருமாள் ஸந்நிதிக்கு அழைத்துக் கொண்டு போய்த் தமக்கு முன்னாக அவருக்குத் தீர்த்தப்பிரஸாதங்கள் கொடுப்பித்து அவரை நோக்கி கர்நாடகத்திலே வேதாந்தியென்று ஒரு பெரிய வித்வான் இருக்கிறதாகக் கேள்விப் படுகிறோம்; நீர் அங்கேபோய் அவரைத் திருத்தி நம் தரிசனப் பிரவர்த்த கனாக்கும் என்று அருளிச் செய்து திருநாட்டுக்கு எழுந்தருளினார்.
14. இராமாநுசர் நியமனத்தை சிரமேற்கொண்டு பராசர பட்டர் திருநெடுந்தாண்டக சாஸ்திரம் கொண்டு மாதவ சூரி எனப்படும் வேதாந்தி யைத் திருத்திப் பணிகொண்டு நஞ்சீயர் என்ற திருநாமம் சாற்றியருளினார். அன்று முதலாக நஞ்சீயர் பட்டரைப் பிரியாமல் அடிமைசெய்து கொண்டு அவர் திருவுள்ளத்துக்கு மேன்மேலும் உகப்பை விளைவிக்கப் பட்டரும் அவர்க்குச் சம்பிரதாய ரகசியார்த்தங்களை எல்லாம் அருளிச் செய்து திருவாய்மொழி முதலிய திவ்யப்பிரபந்தங்களின் விசேஷார்த்தங்களையும் விவரிக்க நஞ்சீயர் அவற்றை ஆதரத்துடன் கேட்டுத் தம் நன்னெஞ்சிற் பூரித்துக்கொண்டு அவரருகிலேயிருந்தார்.
15.அக்காலத்திலே திருவரங்கம் பெரியகோயிலின் ஏழு திருச் சுற்றுக்களில் ஆறாவது திருச்சுற்றான திரிவிக்கிரமன் திருவீதித் திருமதிள் மிகவும் பாழ்பட்டு சரிந்துவிழ, அதனைச் சீர்படுத்திக் கட்டுவிக்கத் தொடங்கிய வீரசுந்தர பிரஹ்மராயன் எனும் சிற்றரசன் அந்தமதிளின் நேர்மைக்கு மாறாகப் பிள்ளைப்பிள்ளையாழ்வானுடைய திருமாளிகை குறுக்கிட்டு இருப்பது கண்டு முன்போலே மதிளை ஒதுக்கிக் கட்டாமல் அவர் திருமாளிகையை இடித்து நேரொழுங்காகத் திருமதிள்கட்டுவிக்க முயன்றான். அதனை அறிந்த பட்டர், அச்சிற்றரசனை நோக்கி, நீ கட்டுவிக்கிற திருமதிளோ பெருமாளுக்கு அரணாகும்; மகாபாகவதரான பிள்ளைப்பிள்ளையாழ்வான் போல்வோர் இந்த திருத்தலத்தில் வாழ்ந்து நம்பெருமாளுக்கு பாதுகாப்பாக அமைந்திருப்பதே உண்மையான அரணாகும்.
16. பிள்ளைப்பிள்ளையாழ்வான் திருமாளிகையைவிட்டு ஒதுங்கத் திருமதிள் கட்டுவிப்பதே உரிய செயலாகும் என்று நல்லுரை கூறினர். வீரசுந்தரன், ஆசாரியபுத்திரரென்ற அச்ச மின்றிப் பட்டரது வார்த்தையை மதியாமல், ஆழ்வானுக்கு அந்தரங்க சிஷ்யரென்ற பெருமையையும் பாராது பிள்ளைப்பிள்ளையாழ்வான் திருமாளிகையை இடித்துத் தள்ளி நேர்படத் திருமதிள் கட்டு வித்தான். இது காரணமாகப் பட்டர்க்கும் அவ்வரசனுக்கும் உண்டான மனத்தாங்கல் நாளடைவிலே மேலிட, வீரசுந்தரன் பட்டரை ஸ்ரீரங்கத்திலிருக்கவொட்டாது மிகவும் உபத்திரவிக்க, பட்டர் யாரிடமும் சொல்லாது கோயிலினின்று புறப்பட்டுத் திருக்கோட்டியூருக்கு எழுந்தருளலானார். பிறகு சில ஆண்டுகள் கழித்து, வீரசுந்தரன் இறந்தவாறே பட்டர் மீண்டும் திருவரங்கத்திற்கு எழுந்தருளினார்.
17. ஒரு கைசிக துவாதசியன்று பெருமாள் ஸந்நிதியிலே பராசர பட்டர் கைசிக புராணம் வாசித்தருளிய அழகினில் உகந்து, ‘பட்டரே உமக்கு மேல்வீடு தந்தோம்‘ என்று அருளிச் செய்ய, இவரும் ‘மஹா ப்ரசாதம்‘ என்று அங்கீகரித்தருளி பெருமாள் தம்மை விசேஷ கடாக்ஷம் செய்தருளின உபகாரத்தைச் சிந்தித்து, ‘நாயன்தே! ஆசன பத்மத்திலே அழுத்தியிட்ட திருவடித்தாமரைகளும் அஞ்சேல் என்ற கையும் கவித்தமுடியும் முறுவல் பூரித்த சிவந்த திருமுகமண்டலமும் திருநுதலில் கஸ்தூரித் திருநாமமும் பரமபதத்திலே கண்டிலேனாகில் ஒரு மூலையடியே முறித்துக் கொண்டு குதித்து மீண்டு வருவேன்‘ என்று நம்பெருமாளையும் பெரியபெருமாளையும் ஆபாதசூடம் (திருப்பாதம் தொடங்கி திருமுடிஈறாக) அநுபவித்து திருமாளிகைக்கு எழுந்தருள திருப்பதியிலுள்ளவர்கள் அடங்கத் திருமாளிகையிலே அமுது செய்தருளின பின்பு பெருங்கூட்டமாக எழுந்தருளியிருந்து, திருநெடுந்தாண்டகத்திற்கு அர்த்தம் அருளிச் செய்யா நிற்கச் செய்தே ‘அலம்பிரிந்த நெடுந்தடக்கை‘ என்கிற பாட்டுக்கு அர்த்தமருளிச் செய்கிறபோது, ‘அஞ்சிறைப்புள் தனிப்பாகன்‘ என்கிறவிடத்திலே
‘பறவையேறு பரம்புருடா நீ யென்னைக்கைக் கொண்டபின், பிறவியென்னும் கடலும் வற்றிப் பெரும்பதம் ஆகின்றதால்‘ என்று இத்தை இரட்டித்து அநுஸந்தித்தருளித் திருக்கண்களை மலரவிழித்துத் திருமேனியைச் சிலிர்ப்பித்துப் புன்முறுவல் செய்து திருமுடியிலே அஞ்சலி செய்து கொண்டு அணையிலே சாய்ந்து நிற்கச் செய்தே சிர: கபாலம் வெடித்துத் திருநாட்டுக்கெழுந்தருளினார். இதுபற்றியே இன்றும் கைசிக துவாதசியன்று பட்டருக்கு ப்ரம்ஹரத வைபவம் ஏற்பட்டுள்ளது.
***