Significance of Shashtyabdhapoorthi

ஷஷ்ட்யப்தபூர்த்தி மஹோத்ஸவத்தின் மஹிமை : ஷஷ்ட்யப்த பூர்த்தி கொண்டாடும் நாளன்று ஒருவர் பிறந்தபோது கோள்கள் எந்த நிலையில் இருந் தனவோ, அதே நிலையில் மீண்டும் அமைகின்றது. பகவான் இப்பிறவியில் அங்கபூர்த்தியுடைய மனிதனாக நம்மைப் படைத்து, நமக்கு அடியார்களை ஆத்ம பந்துக்களாக்கி ஸந்மார்க்கத்தில் ஈடுபடவைத்து, பக்தி உணர்வினைத் தந்து, அடியார்களுக்குத் தொண்டு செய்யும் எண்ணத்தைக் கொடுத்து, நம்மை 60 ஆண்டு கள் ரக்ஷித்தற்காக பகவானுக்கு நன்றிசொல்லும் நிகழ்ச்சியே ஷஷ்ட்யப்த பூர்த்தி மஹோத்ஸவம். வேதவிற்பன்னர்களையும், அருளிச்செயல் வல்லார்களையும், 60 வயதிற்கு மேற்பட்ட பெரியோர் களை ஸந்மானிப்பதும் இந்த விழாவின் முக்கியக் குறிக்கோள்களாகும். தமிழ் வருஷங்கள் 60. இந்த 60 வருஷங்களையும் கடந்து மீண்டும் புதியதொரு ஆன்மீக வாழ்வு வாழ்ந்திட தன்னை உட்படுத்திக் கொள்வதே ஷஷ்ட்யப்தபூர்த்தி விழா. ஆசீர்வாதம் என்பது பெரியோர்கள் தன்னைவிட குறைந்த வயது படைத்தவர்களை வாழ்த்துவதும் ஸந்மானம் அளிப்பதுமாகும். ஷஷ்ட்யப்த பூர்த்தி கண்ட தம்பதிகளை வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொள்பவர்கள் ஆயுள், ஆரோக்கியம், சுகவாழ்வு, மக்கட் செல்வம், பொருட்செல்வம், வெற்றி ஆகியவற்றைப் பெற்றிடுவர். பெரியோர்களுடைய ஆசி வீண்போவதில்லை. அவ்வாறு அவர்கள் ஆசீர்வதிக்கும்போது சேர்க்கப்படும் அக்ஷதையினை சிரத்தையுடன் சிரசில் தரித்துக் கொள்ளவேண்டும். இப்படி பக்திச்ரத்தையுடன் அவரவர் நக்ஷத்ரத்தன்று இந்த ஆயுஷ்ய ஹோமத்தைச் செய்பவர்களையும் அவரது பந்துக்களையும் ஆயுர் தேவதையும், நவக்ரஹ தேவதைகளும், நக்ஷத்ர தேவதைகளும், திசைக்காப்பாளர்களும், மற்றும் ஸகல லோக நாயகனான எம்பெருமானும் கைவிடாது காப்பர் என்கிறது தர்ம சாஸ்த்ரம். எனவேதான் இதை விட்டிடாமல் அவசியம் செய்ய வேண்டும் என்பர் பெரியோர். அப்போது அபிவாதனம் செய்யும்போது எல்லோருடைய ஆசியையும் பெறலாம்.

அருளிச்செயல் பதிகங்களும் அவற்றை அநுஸந்திப்பதால் விளையும் நன்மைகளும்

திவ்யப்பிரந்த பாசுரங்களை ஒருவர் தினந்தோறும் அனு-ஸந்தித்து வந்தால் அதற்குத் தகுந்த பலனை எம்பெருமான் அளித்திடுவான். ஆழ்வாருடைய அருளிச் செயல் வேதத்தையும் விஞ்சியதான தன்மை கொண்டது

. ஆழியெழச் சங்கும்வில்லுமெழ * திசை வாழியெழத் தண்டும்வாளுமெழ * அண்டம் மோழையெழ முடிபாதமெழ * அப்பன் ஊழியெழ உலகம்கொண்டவாறே. திருவாய்மொழி 7-4-1 மற்றொன்றும்வேண்டாமனமே! * மதிளரங்கர் கற்றினம்மேய்த்தகழலிணைக்கீழ் * – உற்ற திருமாலைபாடும்சீர்த்தொண்டரடிப்பொடி யெம் பெருமானை எப்பொழுதும்பேசு. திருமாலைத் தனியன்

ஸர்வேஜனா: ஸுகினோபவந்து ஸமஸ்தஸன்மங்களானிஸந்து

Manakkal Nambi Vaibhavam

ஸ்ரீ:

உய்யக்கொண்டார் திருவடிகளே சரணம் மணக்கால்நம்பிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

1) 1080 ஆண்டுகளுக்கு முன்பு விரோதி வருஷம் மாசி மாதம் மக நக்ஷத்ரத்திலே அவதரித்தவர் மணக்கால்நம்பி.
2) ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யரான உய்யக்கொண்டாரின் நெஞ்சுகந்த சீடராவார் மணக்கால்நம்பி.
3) இவரது இயற்பெயர் ஸ்ரீராமமிƒரர் அல்லது ஸ்ரீராமன் என்பதாகும்.
4) உய்யக்கொண்டாரின் பெண்கள் சிறு வயதினராய் இருந்த காலத்தில் காவிரியிலிருந்து திருமாளி கைக்குத் திரும்பும்போது பாதை சேறாயிருக்கக்கண்டு அந்தப் பாதையைக் கடக்க அஞ்சி நிற்க, ஸ்ரீராமன் தாமே அந்தச் சேற்றில் படுத்துக் கொண்டு உய்யக்கொண்டாரின் பெண்களைத் தன் முதுகின் மேல் கால் வைத்து கடந்து போகச் சொன்னார். இதனால் இவருக்கு மணக்கால்நம்பி என்ற பெயர் ஏற்பட்டது. (மணற்காலை முதுகில் தரித்தவர்.)
5) நாதமுனிகளின் பேரனான யமுனைத்துறைவர் அரச போகத்தில் திகழ்ந்து கொண்டிருந்தபோது, ஆறு மாதம் அவர் விரும்பி உண்ட தூதுவளைக் கீரையைச் சேர்ப்பித்து யமுனைத்துறைவரைத் திருத்திப்பணி கொண்டவர் மணக்கால்நம்பி.
6) ஆளவந்தாருக்கு உய்யக்கொண்டார் நியமனப்படி பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தை (நாதமுனிகள் நம்மாழ்வாரிடம் திருவாய்மொழி கேட்டருளியபோது நம்மாழ்வார் திருக்கரங்களால் எதிர்காலத்தில் அவதரிக்கப் போகும் இராமாநுசருடைய விக்ரஹத்திற்கே பவிஷ்யதாசார்ய திருமேனி என்று பெயர். அதாவது எதிர்காலத்தில் அவதரிக்கப்போகும் இராமாநுசருடைய திருவுருவம் என்பது இதற்குப் பொருளாகும்.
7) மணக்கால்நம்பியின் திருவாராதனப் பெருமாள் அழகிய மணவாளன்.
8) இவர் 105 ஆண்டுகள் இந்த நிலவுலகில் வாழ்ந்து வந்தார்.
9) இவருடைய சிஷ்யர்கள் ஆளவந்தார், திருவரங்கப் பெருமாள் அரையர், தெய்வத்துக்கரசு நம்பி, பிள்ளையரசு நம்பி, திருமாலிருஞ்சோலை தாஸர், வங்கிபுரத்து ஆச்சி ஆகியோர்.
10) “உம் முன்னோர்கள் சேர்த்து வைத்த தனமிது” என்று ஆளவந்தாருக்குப் பெரியபெருமாளைக் காட்டிக் கொடுத்தவர் மணக்கால்நம்பி.
11) இவருடைய ஆளவந்தார்க்கு பச்சையிட்ட (தூதுவளைக்கீரையை ஸமர்ப்பித்து ஆட்கொண்ட செயல்) செயலை பாண்டவர்களுக்காக துரியோதனனிடம் தூது சென்ற கிருஷ்ணனின் செயலை ஒக்கும் என்று திருவாய்மொழி 6-8-1 பாசுர உரையில் நம்பிள்ளை கொண்டாடுகிறார்.
12) ஆசார்ய கைங்கர்யத்திற்கு ஒப்புமை சொல்ல வேண்டுமானால் இருவரே தேறுவர். அவர்கள் இராமாநுசருக்கு அடிமை செய்த வடுகநம்பியும், உய்யக்கொண்டார் திருப்பாதங்களைப் பற்றி நின்ற மணக்கால் நம்பியும் ஆவர்.
13) பெருமாள் திருமொழி  திவ்யப்பிரபந்தத்திற்கு “ஆரங்கெட பரனன்பர் கொள்ளார் என்று …” தொடங்கும் தனியனை அருளிச் செய்தவர் மணக்கால்நம்பி.
14) அவதார ஸ்தலத்தில் திரிதண்டத்துடன் ஸேவை ஸாதிக்கும் திருக்கோலத்தைக் கொண்டு இவர்தம் வாழ்நாளின் இறுதியில் ஸந்நியாச ஆச்ரமத்தை மேற்கொண்டிருக்கக்கூடும் என்று தெரிகிறது.

தொகுப்பு: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யர்.