Gaya Sraaddham

Gaya is significant to Hindus from the point of view of salvation to the souls of ancestors (a ritual called pinda daan). According to Ramayana, when Lord Rama came to Gaya along with Sita for pitrupaksha (or to perform pindadanam), Sita cursed the Falgu River following some disobedience on the part of the river. The mythology states that on account of this curse, Falgu River lost its water, and the river is simply a vast stretch of sand dunes. At the same time Sita blessed a banyan tree to be immortal. This tree is known as Akshyavat. Akshyavat is combination of two words Akshaya (which never decay) and Vat (Banyan tree). This is the reason we utter Akshaya Vata chayayam Gaya Sraaddham Karishye during the Sraddha ceremony.Once a year banyan trees shed leaves, but this particular tree never sheds its leaves which keeps it green even in times of drought.

For Buddhists, Gaya is an important pilgrimage place because it was at Brahmayoni hill that Buddha preached the Fire Sermon (Adittapariyaya Sutta) to a thousand former fire-worshipping ascetics, who all became enlightened while listening to this discourse. At that time, the hill was called Gayasisa.

Thirumann Kaappu Vaibhavam 2

122இன் தொடர்ச்சிஆசிரியர். தேரெழுந்தூர் ஸ்ரீ.உ.வே.க. ராமன் பட்டாசார்யர்.
இந்த விஷயத்தை ஈƒவர ஸம்ஹிதையில் 21ஆம் அத்யாயத்தில் எம்பெருமானின் இரண்டு திருவடிகள்தான் இரண்டு பக்கத்திலும் உள்ளதாகக் கூறுகிறார். “நிரைமலர்பாதங்கள் சூடி” என்னுமாப்போல் ஊர்த்3வ புண்ட்ரம் ரிஜும் ரம்யம் விஷ்ணுயோ: பாத3த்3வயாக்ருதிம்” என்றும்,  “ஆரப்4யநாஸிகா மூலம் லலா டாந்தம் லிகேத்க்ரமாத்” (மஹாவிஷ்ணுவினுடைய அழகிய இணைத்தாமரை திருவடிகளின் வடிவத்தைக் கொண்டு விளங்குகிறது மேல் நோக்கி எழுதப்பட்ட திருமண்காப்பு)என்றும் “நாஸிகாத்வ்யங்குலம் பாதம் மத்யமம் ஸர்த்தாங்குலம்பவேத். பார்ச்வம் அங்குல மாத்ரம் து ஸுஸ்பஷ்ட்டம் தாரயேத் த்3விஜ:”  என்றும், மூக்கின் நுனியிலிருந்து ஆரம்பித்து, அடிமூக்கில் இரண்டங்குல பாதமும், நடுவில் ஒன்றரையங்குலம் இடமும் விட்டு பக்கத்தில் ஓரங்குலமும் தரித்து தலையின் உச்சி வரையிலும் சாற்றிக் கொள்ள வேண்டியது என்றும் பாத்ம, பரா†ர, வாஸிஷ்ட ஸம்ஹிதைகளில் கூறப் பட்டுள்ளது.
இனி, ஸ்ரீசூர்ணம் தரித்துக் கொள்ளும் விஷயமாக ஆகமங்கள் கூறுவதைப் பார்க்கலாம். இந்த ஸ்ரீசூர்ணமானது சிவப்பு வர்ண மாகவும், மஞ்சள் வர்ணமாகவும், பெரியோர்கள் திருமண் மத்தியில் சாத்திக் கொள்வர்கள். அது சிவப்பு வர்ணமாக இருப் பதற்கு ப்ரமாணமாக ஸ்ரீபாரமேƒவரத்தில் முன்பு கூறியதுபோல் ……..(வச்யார்த்தீ ரக்தயாஸ்ரீச்சன்) என்றும், இங்கே வச்யம் என்பது ஸ்ரீமந்நாராயணனையே நம் வசப்படுத்துதல் என்பது பொருள். மேலும் பராசர ஸம்ஹிதை-3ஆம் அத்யாயத்தில்
விஷ்ண்வர்பிதம்ரக்தவர்ணம் ஹரித்ரா சூர்ணமுத்தமம்
லக்ஷ்மீநிவாஸஸித்த்யர்த்தம் தீபாகாரம் து ஸூக்ஷ்மகம்
ஸ்ரீசூர்ணம் ஸ்ரீகரம் தி3வ்யம் ஸ்ரீயச் சாங்கே ஸமுத்பவம்
புண்ட்3ரத்3வயஸ்ய மத்4யேது த4õர்யம் மோக்ஷார்த்த ஸித்3த4யே
(ஸ்ரீசூர்ணம் சிவப்பு நிறத்திலோ அல்லது மஞ்சள் நிறத்திலோ இருப்பது நலம். ‘அகலகில்லேன்’ என்று பகவானின் மார்பில் நித்யவாஸம் செய்யும் மஹாலக்ஷ்மியுடன் கூடிய ஸ்ரீநிவாஸனை அடையும் பொருட்டு விளக்கு ஜ்வாலை வடிவில் ஸ்ரீசூர்ணம் தரிக்க வேண்டும் மங்களகரமானதும், தெய்வீகமானதுமான ஸ்ரீசூர்ணம் மோக்ஷம் அளிக்கவல்லது) என்றும் இருப்பதாலும் ஹிரண்ய வர்ணையான மஹாலக்ஷ்மியின் சரீரத்தி லிருந்து தோன்றியதான சிவப்பு வர்ண ஸ்ரீசூர்ணத்தை தரிக்க வேண்டியது என்பது பொரு ளாகிறது. இந்த விஷயத்தில் ஒரு ஸம்சயத்தை உண்டு பண்ணும் விஷயமானது தாயார் ஹிரண்ய (மஞ்சள்) வர்ணமாக இருக்கும் போது அவளது சரீரத்திலிருந்து வந்த ஸ்ரீசூர்ணம் மட்டும் சிவப்பாக இருக்குமா? அதுவும் மஞ்சள்தானே என்று சந்தேகம் எழலாம். ஆனால் வராஹர் மூலமாகத் திருமண் தோன்றியது என்பதைப் பார்க்கும்போது அவரது மடியில் அமர்ந்திருந்த பிராட்டியின் சரீரம் அவரது அரைச் சிவந்த ஆடையின் மேலன்றோ பட்டுக் கொண்டி ருந்தது. அதனால் அவளது நிறமும் சிவப்பாயிற்று. அந்த ஸமயத்தில் தோன்றிய ஸ்ரீசூர்ணமும் சிவப்பாயிற்று. சதுச்லோகியில்:
†õந்தாநந்த3மஹாவிபூ4தி பரமம் யத்ப்3ரஹ்மரூபம் ஹரே:
மூர்த்தம் ப்3ரஹ்மததோபிதத் ப்ரியகரம் ரூபம்யத3த்யத்3பு4தம்,
(சதுச்லோகி-4)எனும் பதம் கவனிக்கத்தக்கது. (காம, க்ரோதங்கள் அற்றதாய், ஆனந்த மயமாய், பெரிய விபூதிகளை உடையதாய் தனக்கு மேலானது அற்றதாய், பெரியதாய் இருந்து கொண்டு பிறரையும் பெரிதாகச் செய்வதாலும் ப்ரஹ்ம சப்தத்தாலே சொல்லப்படுவதாயும் இருக்கும் ஹரியின் யாதொரு ஸ்வரூபம் உண்டோ அதைக்காட்டிலும் அந்த பகவானுக்கு மிகவும் ப்ரியமாயிருப்பதும் கண்ணால் காணக் கூடியதுமான மிக அத்புதமான ரூபம்.)அதாவது எம்பெருமான் எந்த உருவில் அவதரித் தாலும் அதற்குத் தகுந்தபடி அவதரிக்கிறாள். அதனால் எம்பெருமான் திருமண்ணை வெண்ணிறமாக கொணர்ந்தான். அதனால் பிராட்டி யாரும் அவர் மடியில் அமர்ந்தபடி ஸ்ரீசூர்ணத்தை சிவந்த நிறமாகவே கொணரச் செய்தாள். இரண்டாவதாக பகவச் சாஸ்த்ரத்தில்
லலாடஏவ ஸா த4õர்யா ஹரித்ராமுக்தித3õயினீ,
விஷ்ணுபாத3 விசிஷ்ட்டாது வீதராகை3ர்முமுக்ஷûபி: என்றும்
விஷ்ணுகாத்ராச்சுதம் சூர்ணம் லலாடேதாரயேச்ஸ்ரீயம்
என்றெல்லாம் பலபடியாகச் சொல்லும்போது ஹரித்ரா சூர்ணமான மஞ்சளானது சிரசில் மட்டுமே (லலாடே ஏவ) தரிக்க வேண்டும் என்றாகிறது.
மேலும் பாத்ம ஸம்ஹிதையில் தாயாரின் ஸ்வரூப வர்ணனையில்
“தப்தஜாம்பூநதப்ரக்யா காந்த்யா லக்ஷ்மீ விராஜதே” என்றும், “தப்தகாஞ்சன ஸங்காசா ஸர்வாபரண பூஷிதா” என்றும், “திவ்யகுங்குமலிப்தாங்கா பத்மமாலோப÷†õபிதா” என்றும், (பத்தரைமாற்று தங்கத்தைப் போல் பிரகாசிக்கிறாள், தங்க ஆபரணங்களை அணிந்துகொண்டு அழகுடன் விளங்குகிறாள், தங்கம் போன்ற நிறமுடையவள், சிவந்த தாமரை மாலைகளுடன் காணப்படுகிறாள்.) “ பத்மகிஞ்சல் கசங்காசா” என்றும், பலவாறாகச் சொல்லும் போது ஹிரண்யவர்ணை யான ‘லக்ஷ்மீயானவள் சுட்டுரைத்த நன்பொன்னிறமாகத்  திகழ்கிறாள்’ என்கிறார். இது சிவப்பாகத்தான் இன்றும் என்றும் உள்ளது. இப்படிப் பட்ட ஸ்ரீசூர்ணத்தை வாஸிஷ்ட்ட ஸம்ஹிதையில் “குங்குமம் வாபிஹாரித்ரம் சூர்ணம் விஷ்ண்வ பிஷேசிதம் ஊர்த்3வ புண்ட்3ரஸ்ய மத்3யேது த4õரயேத் தீபவத் த்விஜ”: (சிவப்பான அல்லது மஞ்சள் நிறமான ஸ்ரீசூர்ணத்தை விஷ்ணுவின் திருவடி களைக் குறிக்கும் திருமண்காப்பின் மத்தியில் தீப ஜ்வாலை வடிவில் இரு பிறப்பாளர்கள் தரிக்கவேண்டும்.) என்னும் விஷயத்தில் கவனிக்கத் தக்கது. மேலும் இந்த ஸ்ரீசூர்ணத்தை எப்படித் தயாரிக்க வேண்டும் என்பதையும் க2க3 ப்ரச்னம் என்கிற ஸம்ஹிதையில் பகவானே கருடனுக்கு உபதேசிக்கிறார்.
ƒருணுதார்க்ஷ்யமஹாப3õஹோயன்மாம்த்வம் பரிப்ரச்சஸி
தத்ப்ரவக்ஷ்யாமிதேசூர்ணம் வைஷ்ணவாணாம்ஹிதாவஹம்
என்று தொடங்கி,
சுத்தாம் ஹரித்ரமாதாய சுஷ்க கிட விவர்ஜிதாம்
மூலமந்த்ரேண சாஹ்ருத்ய சோஷயேச்ச கராதபே
ஸ்ரீகந்தாகரும்சைவ கர்பூரேண ஸமன்விதம்
காச்மீரம்ச ஸ கஸ்தூரி ஸ்வர்ணசூர்ண விமிச்ரிதம்
ஹரத்ராம் ஸம்யகாஹ்ருத்ய மூலமந்த்ரேண மந்த்ரவித்
ஸம்க்ஷாள்ய உலூகலம் தார்க்ஷ்ய முஸலம் மூலமந்த்ரத:
ஸ்ரீவைஷ்ணவைர் வேதவித்பிர்மந்மரங்கைஸ்ஸமுபஸ் திதை:
ஸஞ்சூர்ணயித்வா ஸுத்ருடைர் நவபாண்டேஸுசோபிதே
பவித்ராரோபமார்க்கேண மந்த்ரைஸ் ஸம்மர்ச்சயேச்சதை:
என்றெல்லாம் சொல்லி அந்த ஸ்ரீசூர்ணமானது முதலில் சுத்தமான மஞ்சளாகவும் அதை உரலிலிட்டுப் பொடி செய்யும்போது கஸ்தூரி, குங்குமப்பூ, அகரு போன்ற பலவித ஸுகந்த வாஸனை த்ரவ்யங்களை அந்த உரலில் சேர்த்து ஸ்ரீவைஷ்ணவர்கள் புருஷ ஸூக்தம், ஸ்ரீஸூக்தம், மூலமந்த்ரம் இவைகளை உச்சரித்தபடியே நன்றாக இடிக்க வேண்டும். பிறகு நன்றாகப் புடைத்து வஸ்த்ரகாயம் செய்து (சலித்தல்) மீண்டும் வேறொரு பாத்திரத்தில் இட்டு முன் போலவே அபிமந்த்ரணம் செய்ய வேண்டும். அந்த சூர்ணத்தைப் பவித்ரோத்ஸவத்தில் எங்கெல்லாம் பவித்ரம் சாத்துகிறோமோ அதைப் போலவே எம்பெருமான், பிராட்டியார் திருமேனிகளில் சாற்ற வேண்டும். பிறகு அந்த சூர்ணத்தையே ஸகல ஸ்ரீவைஷ்ணவர் களுக்கும் பாகவதோத்தமர்களுக்கும் ப்ரஸாதமாகத் தரவேணும். அதையே அவர்கள் அனுதினமும் தரித்துக் கொள்ள வேண்டும் என்றும் அருளியிருக்கிறார்.
ஏததனு †õஸனம். ஏவமுபாஸிதவ்யம்,
ஏவமுசைததுபாஸ்யம்
என்னுமாப்போலே ஸ்ரீசூர்ணம் என்பது சிவப்பு நிறமாகக் கொள்வதில் எந்த ஒரு தடையுமில்லை என்பது ஸ்ரீபாஞ்சராத்ர ஆகமத்தைக் கொண்டே தெளிவு பெறலாம்.
இனிஸ்ம்ருதி, இதிஹாஸ, புராணாதிகளிலும், உபநிஷதங்களிலும் ƒவேத மண்ணான திருமண்காப்பிற்கான ப்ரமாணங்களாக-
நாரதீய புராணத்தில்,
ƒவேத ம்ருத்திகயை வார்யைச்யாமயா பீதயாபி வா
ஊர்த்வபுண்ட்3ரம் த்3விஜை: கார்யம் வைஷ்ணவைƒச விசேஷத:-
என்றும், †ங்க2சக்ரோர்த்வ புண்ட்ர தாரணம் தாஸ்ய லக்ஷணம்
தந்நாகமகரணம் சைவ வைஷ்ணவம் ததிஹோச்யதே- என்றும் ஹாரீத ஸ்ம்ருதியில் “நாஸாதிகேசபர்யந்தம் ஊர்த்3வபுண்ட்ரம் து த4õரயேத் அக்நி நாவை ஹோத்ராசக்ரம் த்விபுஜே த4õர்யதே”     என்றும்,                                 (தொடரும்)

Thirumann Kaappu Vaibhavam

ஆசிரியர்: தேரெழுந்தூர் ஸ்ரீ.உ.வே. ராமன் பட்டாசார்யர்.
முதலில் மண்ணானது வெண் மண்ணாகவும், பிறகு திரு மண்ணாகவும் ஆன வைபவத்தைப் பார்ப்போம். ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம் பொதுவாகச் சொல்லப்படும்போது …
யே கண்ட2 லக்3ந துளஸி நளிநாக்ஷமா லா
யே ப3õஹுமூல பரிசிந்ஹித †ங்க2சக்ரா:
யே வா லலாட ப2லகே லஸதூ3ர்த்4வ புண்ட்3ரா
ஸ்தே வைஷ்ணவா பு4வநமா†ú  பவித்ரயந்தி என்றும் குறிப்பிடப் படுகிறது.
“எந்த ஒரு ஸ்ரீவைஷ்ணவன் கழுத்தில் துளசி மணியும், நெற்றியில் திருமண் காப்பும் துலங்க, பஞ்சஸம்ஸ்காரமும் செய்து கொண்டு பூமியில் உலாவுகிறானோ அவன் மூலம் தான் இந்த உலகம் பரிசுத்தமாகிறது”. இது தர்ம சாஸ்த்ர வசனமாகும்.
பஞ்சஸம்ஸ்காரத்திற்கு முன்பாகவே திருமண்காப்பினைத் தரித்துக்கொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு. திருமண் காப்பைத் தரித்துக் கொள்வதில் சமய, சாதி பேதங்கள் இல்லை. (அந்தணர் அல்லாத வகுப்பில் ஒருவர் இறந்தால் அவர் விபூதி அணிந்து கொள்ளும் வழக்கத்தைக் கொண்டவராய் இருந்தபோதிலும் இறுதியாத்திரையின் போது திருமண் காப்பு இடப்பட்டு கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்தோடுதான் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்வர்.) உபநிஷதங்களில் கூட மனிதனது சரீரத்தில் 101 நாடிகள் முக்கிய மானவை என்று குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் மிக முக்கியமான நாடி ஸுஷûம்நை என்பது. இது நாபியிலிருந்து தலையை நோக்கிச் செல்கிறது. அந்த நாடியால் உயர்கதியான பரமபதத்தை அடைகிறான். அதனால்தான் நாமெல்லாம் நெற்றியில் முக்கியமாகத்  திருமண் காப்பினை மேல் நோக்கி அணிந்து கொள்கின்றோம். இது பகவானாகிய ஸ்ரீமந்நாராயணனுக்கே அடிமை பூண்டோம் என்பதை உணர்த்துவதாகும். இந்தக் கருத்து கடவல்லியிலும், ஸ்ரீபாஞ்சராத்ர ஆகமத்திலும் விரிவாகக் கூறப்படுகிறது. “திருமண்காப்பினை”  முதலில் துளசி மண்ணினாலும், திவ்ய க்ஷேத்ர மண்ணினாலும் நம்பூர்வர்கள் அணிந்து கொண்டு வந்தார்கள்.
ஆனால் ஸ்ரீவராஹாவதாரம் எடுத்து பூமிதேவியை உத்தரிப் பித்தபிறகு அவரைத் துதிக்க வந்த தேவர்களையும், முனிவர்களையும் மற்ற ஜீவராசிகளையும் கடாக்ஷிக்கும்போது எல்லோருடைய நெற்றியும் சூன்யமாக இருந்தது கண்டு திருமண்காப்பின் பெருமைபற்றி அருளிச் செய்கிறார் வராஹமூர்த்தி. மாக்களாக உள்ள வர்களை மக்களாக்கி, பிறகு நன்மக்களாக்குவதற்கு உதவும் ஒரு சின்னம்தான் ஊர்த்வ புண்ட்ரம். இதன் பொருள் மேல் நோக்கிய கோடு என்றும், மேல் ஸ்தானமான வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்ல உதவும் ஒரு சின்னம்தான் திருமண்காப்பு என்று வராஹமூர்த்தி உபதேசிக்கிறார். இப்படியாக இந்த மண்ணை முதன் முதலில் பூலோகத்திற்குக் கொண்டு வந்த அவதாரம் வராஹவதாரம். இந்த வெண் மண்ணானது பகவானுடைய  திருக்கரம் பட்டதால் திருமண் ஆனது.
இனி இந்த திருமண் என்பது வெண்மண்ணினால் இட்டுக் கொள்வதற்கான ப்ரமாணங்களைப் பார்ப்போம்.
வராஹ உபநிஷத்தில் ஸ்ரீ ஸனத்குமாரர் வராஹரூபியான பகவானை வணங்கி “பகவானே ஊர்த்வ புண்ட்ரம் தரிக்கும் விதியையும், என்ன த்ரவ்யம் கொண்டு தரிக்க வேண்டும்? எந்தெந்த ஸ்தானத்தில் தரித்துக் கொள்ள வேணும்? அதன் அளவுகள் எவ்வளவு? தரித்துக் கொள்ளும் போது சொல்ல வேண்டிய மந்திரம் என்ன? கர்த்தா யார்? பலன் என்ன? என்றெல்லாம் வினவுகிறார். உடனே பகவானும் ஸ்ரீகருடனுக்குக் கட்டளையிட அவரும் க்ஷீராப்தி யிலிருந்து பால்கட்டிகளைக் கொண்டு வந்து பல திவ்ய க்ஷேத்ர ங்களில் தெளித்தார். அந்தக் கட்டிகள் விழுந்த இடங்கள்தான் இன்றளவும் ச்வேதம்ருத்திகை என்றும், அந்த க்ஷேத்ரங்கள் ச்வேதகிரி எனவும், ச்வேதபுஷ்கரணி என்பதாகவும் பல பெயர்களில் விளங்குகிறது. மேலும் திருமண் என்றும் விளக்குகிறது. இதனை ஸ்ரீபாஞ்சராத்ரம் ஈச்வர ஸம்ஹிதையில் 20ஆம் அத்யாயத்தில்,
இதி தே3வை: ப்ராத்தி2தோயம் வராஹோ ப4க3வான் ஹரி:
ஸ்வாங்கே3 வஸுந்த4ராம் ந்யஸ்ய தஸ்யா உபதி3†ந் மனும்
ப்ராக்3ப4õகே3 தஸ்ய தீர்த்த2ஸ்ய ஹ்ருத4õப்யாஸ்தே முநீƒவரா:
தத்ர தேன வராஹேண ஸ்வாஜ்ஞ ப்த: பதகே3ƒவர:
ƒவேத த்3வீபாச்சு2த்3த4ம்ருத3ம் ஸமாஹ்ருத்ய ஸரஸ்தடே
புராநிக்ஷிப்தவான் ஸாஹி ம்ருத்திகா லோகபூஜிதா என்று திருநாராயணபுர வைபவ விஷயத்தில் அருளிச் செய்கிறார்.
(பூமிப்பிராட்டியை தனது இடதுபாகத்தில் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு ஸ்ரீவராஹமூர்த்தி வராஹ ச்ரமச்லோகத்தை அருளிச் செய்தார். கருட பகவானை ஸ்வேத தீபத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வெண்மையான மண்ணை கல்யாண புஷ்கரணிக் கரையில் தெளிக்கச் செய்தார். அந்த மண்ணானது உலகத்தோரால் பூஜிக்கப்பட்டு திருமண்ணானது.)  ஸ்ரீப்ரச்ன ஸம்ஹிதையிலும் தீக்ஷை என்கிற ஸம்ஸ்காரத்தின் ஓர் அங்கமாக அர்ச்சக சீடனுக்கு மந்த்ர உபதேசங்கள் செய்யும்போது நெற்றி முதல் பின்கழுத்து வரை யிலான 12 இடங்களில் புண்ணிய க்ஷேத்ர வெண்மண்ணினால் அஸ்த்ர மந்த்ரத்தினால் அபிமந்த்ரம் செய்து இட வேண்டியது, அப்போது நகமானது சரீரத்தில் படாமல் இருக்க வேண்டியது என்றும் உபதேசிக்கிறார்.
ததஸ்து மூலமந்த்ரேண ஹுத்வாபூர்ணாஹுதிம் கு3ரு:ஐ
‡ஷ்யஸ்ய சோர்த்4வ புண்ட்3ராணி ம்ருத்ஸ்நயா ƒவேத பூர்வயா ஐ
லலாடாதி3 த்3வாதசஸு குர்யாத3ங்கே3ஷீ மந்த்ரவித்ஐ
க்3ருஹீத்வாக்ஷேத்ராத்3 விமலாம் ƒவேத ம்ருத்திகாம் ஐ
ஸம்க்ஷாள்ய சாஸ்த்ர மந்த்ரேண தத்ரவைƒவேத ம்ருத்திகாம் ஐ
ப்ரணவேந து விந்யஸ்ய க3ந்த4த்3வாரே தி தாம் ம்ருத3õம்
ஏதாபி4ரங்கு3லீபி4ரஸ்து த4õரயேந்ந நகை2: ஸ்ப்ரு÷†த்
(பஞ்சஸம்ஸ்காரத்தின் போது ஆசார்யன் மூல மந்த்ரத்தை உபதேசித்தபிறகு, திருமண் காப்பு தரித்துக் கொள்ளும் முறையையும் உபதேசிக்கிறார். நெற்றியில் தொடங்கி பன்னிரண்டு திருமண்காப்புகளை உடலின் பல்வேறு அங்கங்களில்  அந்தந்த இடத்திற்குரிய ப்ரணவத்தோடு கூடிய நாமத்தை உச்சிரித்துக் கொண்டு கை நகம் படாமல் நறுமண் கொண்ட திருமண்ணைக் குழைத்து இட்டுக் கொள்ள வேண்டும்.)
இதே விஷயம் ஸ்ரீபராசர ஸம்ஹிதையில் “த்விஜ க்ரமாதி ஸித்யர்தம் விஷ்ணு ஸாயஜ்யஸித்தயே” என்று தொடங்கி
ஸச்சித்3ரமூர்த்4வ புண்ட்ரம் ச த4õரயேத் ஸ்வேதம்ருத்ஸ்நயா
ப்ரபத்திப2ல ஸித்3த்4யர்த2ம் விஷ்ணு ஸாந்நித்4ய ஹேதவே
பங்கீக்ருத்ய த்3வயேநைவ ஸுத்3த4õம் து ச்வேத ம்ருத்திகாம்
விஷ்÷ணுõர் நுகமிதி மந்த்ரேண க3ந்த4த்3வாரேதி மந்த்ரத: என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
(வெள்ளை மண்ணாலான திருமண்காப்பைத் தரித்துக் கொண்டு ‘விஷ்÷ணுõர்நுகம்’ என்ற வேத மந்த்ரத்தையும், ‘கந்தத் துவாராம்’ என்ற வேத மந்த்ரத்தையும் சொல்லிக் கொண்டு திவ்யதம்பதிகளை முன்னிட்டு விஷ்ணு ஸாந்நியத்தத்தை காரணமாகக் கொண்டு தான் செய்த ப்ரபத்தியினுடைய பலனைப் பெறுகிறான்.)
அந்த மண்ணைக் கையில் எடுத்துக் குழைக்கும் போது “ச்வேதம்ருத்தே3வி பாபக்3னேவிஷ்ணு தேஹ ஸமுத்பவே. சக்ராங்கிதே நமஸ்து த4õரணான் முக்திதாபவ” என்றும் “விஷ்ணோர் னுகமிதிமந்த்ரேண கந்தத்வாரேதி மந்த்ரத: ஸுதர்சனானுஷ்ட்டு பேன சஐ ந்ருஸிம்மைகாக்ஷரேண ச பூபீஜேனை வமாமந்த்ர்ய கோபிர் மந்த்ரம் ஹரிம் ஸ்மரன்” என்றும் சொல்லி உத்தரணியால் தீர்த்தம் சேர்த்து குழைத்துக் கொள்ள வேண்டியது. பிறகு மோதிர விரலால் இட்டுக் கொள்ளவேணும் என்பது ஸித்தாந்தம்.
ஸ்ரீபாரமேச்வர ஸம்ஹிதையில் 3ஆம் அத்யாயத்தில் அவரவர்கள் பலனுக்கேற்ப திருமண்ணின் நிற பேதமும், இட்டுக் கொள்ளும் முறையும் கூறி, அந்தந்த திருமண்ணின் உருவ பேதங் களையும் கூறுகிறார்.
பூர்வோக்தேந வித4õநேந ஸமாசம்யோர்த்4வ புண்ட்3ரகை:
சந்த3நாதை4: ஸுக3ந்தை4ர்வா த4ர்மக்ஷேத்ரே வி÷†ஷத:
பர்வதாக்3ரே நதீதீரே ஸிந்து4தீரே ததை2வ ச
வல்மீகே துளஸீமூலே ப்ர†ஸ்தா ம்ருத்திகா த்3விஜா
வƒயார்த்தீ2 ரக்தயாƒரீச்ச2ன் பீதயா †õந்திகாமிக:
ƒயாமயா மோக்ஷகாமி ச ƒவேதயா ச ஊர்த்4வ புண்ட்3ரகம்
வர்தி தீப3õக்ருதிம் சைவ வேணுபத்ராக்ருதிம் தத2õ
பத்மஸ்ய முகுலாகாரம் உத்பலம் முகுலாக்ருதி
மத்ஸ்ய கூர்மாக்ருதிம் சைவ ச †ங்கார மத: பரம்  (தொடரும்)

Ponnadikkal Jeeyar ennum Vanamamalai Jeeyar vaibhavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

ஒன்றான வானமாமலை ஜீயர் வைபவம்

1. ‘பொன்னடிக்கால் ஜீயர்’ என்று பெயர் பெற்ற ஒன்றான வானமாமலை ஜீயர் அவதார திருநக்ஷத்ரம் 2-10-2010 அன்று புரட்டாசி மாதம் புனர்பூச நக்ஷத்ரத்தில் நடைபெறவுள்ளது.
2.  ஸ்ரீமணவாளமாமுனிகள் நியமித்தருளிய அஷ்டதிக்கஜங்களில் முதன்மையானவர்.
3. பிரம்மசாரியாய் இருந்தபோதே ஸந்யாச ஆச்ரமத்தை ஏற்றார்.
4. அழகிய வரதர் என்பது இவருடைய பூர்வாச்ரம திருநாமமாகும்.
5. ஸ்ரீமணவாளமாமுனிகளின் நியமனத்தின் பேரில் வடநாட்டு யாத்திரை செய்து, தோதாத்திரி ராமானுஜ ஸிம்மாஸனத்தை நிறுவி, மஹந்துக்களை நியமித்து விசிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தத்தை வளர்த்தவர்.
6. வடநாட்டில் ஆச்ரயித்த மஹான்களில்  ஸ்ரீஸ்வாமி ராமானந்தர் முக்கியமானவர்.
7. திருப்பதியிலிருந்து ஸ்ரீவரமங்கை நாச்சியாரை எழுந்தருளப் பண்ணி ஸ்ரீதெய்வநாயகப் பெருமானுக்கு விவாஹம் செய்வித்து ஜனகரைப் போலவும், பெரியாழ்வாரைப் போலவும் எம்பெருமானுக்கு மாமனாராக இருக்கும் பெருமை பெற்றவர்.
8. திருப்பாவைக்கு ஸ்வாபதேச  வ்யாக்யானம். நாச்சியார் திருமொழிக்கு அமைந்துள்ள கோலச் சுரிசங்கை தனியன் ஆகியவை இவர் இயற்றியவையாகும்.
9. ஸ்ரீமணவாளமாமுனிகளின் ப்ரதான சிஷ்யர்கள். 1) ஸ்ரீவானமாமலை ராமானுஜ ஜீயர். 2) திருவேங்கட ஜீயர். 3) பட்டர்பிரான் ஜீயர். 4) கந்தாடை அண்ணன்  5) எறும்பியப்பா 6) பிரதிவாதி பயங்கரம் அண்ணன். 7) அப்புள்ளார் 8) அப்பிள்ளை ஆகியோர் ஆவர்.
10. இதை எளிதாக நினைவாற் கொள்வதற்காக,
“பாராரு  மங்கை திருவேங்கடமுனி பட்டர்பிரான்
ஆராமம் சூழ் கோயில் கந்தாடையண்ணன் எறும்பியப்பா
ஏராருமப்பிள்ளை அப்பிள்ளார் வாதிபயங்கரரென்
பேரார்ந்த திக்கயஞ்சூழ் வரயோகியைச் சிந்தியுமே”.
என்ற பாடலை அனுஸந்திப்பதன் மூலம் அஷ்டதிக் கஜங்களின் திருநாமங்களை நினைவில் கொள்ளலாம்.
11. வானமாமலையிலே உயர்குடியிலே தோன்றி மிகுந்த வைராக்ய சீலராக நின்று உலக வாழ்வு என்றால் திருமணம் செய்து கொண்டு வாழ்வதுதானா? அனைவருக்கும் உதவுமாறு உலக வாழ்வைத் துறந்து வாழமுடியாதா? என்ற எண்ணத்துடன் வானமாமலைப் பெருமாளை ஆச்ரயித்து துறவறத்தை மேற்கொண்டவர் இவர்.
12. ஸ்ரீமணவாளமாமுனிகளின் திருவடிகளைப் பற்றிக் கொண்டுஅவருடைய நிழல்போல் வாழ்ந்து மாமுனியின் அனைத்து கைங்கர்யத்திலும் பங்கு கொண்டார்.
13. இவர் சிஷ்யரான பின்புதான் ஸ்ரீமணவாளமாமுனிக்கு சிஷ்யர்கள் பெருகினராம். ஏன் அரங்கநாதனே சிஷ்யனாகி விட்டானே!! அதனால் இவர் திருவடி பொன்னடி எனப்பட்டது.
14. பெருமாள் திருவடி-ஸ்ரீசடகோபம் (சடாரி) நம்மாழ்வார் திருவடி-உடையவர், உடையவர் திருவடி-முதலியாண்டான், மணவாளமாமுனி திருவடி- பொன்னடியாம் செங்கமலம் என்று அழைக்கப்படுகின்றன.
15. ஒன்றான வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் அஷ்டதிக்கஜங்கள். 1. அப்பாச்சியாரண்ணா. 2. போரேற்று நயினார் 3. சுத்த ஸத்வம் அண்ணா 4. ராமாநுஜம் பிள்ளை 5. சண்டமாருதம் மஹாசாரியர் 6. திருக்கோட்டியூரையன் 7. பள்ளக்கால் சித்தர்                       8. ஞானக்கண் ஆத்தான் ஆகியோர்.
16. ஒன்றாவது முதல் 30ஆவது பட்டம் வரை உள்ள வானமாமலை மடத்து ஜீயர்கள் , வானமாமலைப் பெருமாளுக்கு பல திவ்யதேசங்களிலும் கைங்கர்யங்கள் செய்து வருகின்றனர்.
17. ஸ்ரீவானமாமலை மடத்தின் கிளைகள் (வட நாட்டில் தோத்தாத்திரி மடம் என்றழைக்கப்படும்) இந்தியாவெங்கும் அமைந்துள்ளன. லட்சணக்கணக்கான சிஷ்யர்களைக் கொண்டது இந்த மடம்.
18. ஸ்ரீசைலேச தயாபாத்ரம் என்று தொடங்கும் தனியனை நம்பெருமாள் அருளிச் செய்திட அதுகண்டு மகிழ்ந்த ஒன்றான வானமாமலை ஜீயர் “இரண்டு முலைக்காம்பிலும் மாறாதே பெருகுகிற பாலை ஆராவமுதமாகக் பருகுவார் நாமேயன்றோ?” என்று அருளிச் செய்தார்.
19. பொன்னடிக்கால் ஜீயரை ஸ்ரீவானமாமலைக்கு காரிய நிமித்தமாய் அனுப்பிவைப்பதற்காகத் திருவுள்ளம் கொண்டு நம்பெருமாள் கோயில் கொண்டிருக்கும், பூபாலராயனிலே எழுந்தருளியிருந்த அரங்கநகரப்பனை ஸ்ரீவானமாமலை ஜீயர் திருக் கரங்களில் எழுந்தருளப் பண்ணிக் கொடுத்தார் ஸ்ரீமணவாளமாமுனிகள்.
20. ஒன்றான வானமாமலை  ஜீயரும் மங்கள வாத்தியங்களுடனே அரங்க நகரப்பனை கோயிலாழ்வாரிலே எழுந்தருளப்பண்ணி ஆராதித்து வந்தார்.
21. இன்றும் ஸ்ரீவானமாமலை மடத்தில் ஆராத்யப்பெருமாளாய் அரங்கநகரப்பன் எழுந்தருளியிருப்பதை அனைவரும் ஸேவித்து மகிழலாம்.
22. ஸ்ரீமணவாளமாமுனிகள் பரமபதித்தபோது வடநாட்டு யாத்திரை நிமித்தமாக எழுந்தருளியிருந்த ஸ்ரீவானமாமலை ஜீயர் உடனிருக்கவில்லை. இதனால் பல நாட்கள் துயருற்றிருந்தார் வானமாமலை ஜீயர்.
23. திருவரங்கத்தில் கீழைச் சித்திரை வீதியில் அமைந்துள்ளது ஸ்ரீவானமாமலை மடம்.               ***


An Interesting Quiz on Venkatachala Ithihasamala

ஸ்ரீ:
வேங்கடாசல இதிஹாஸமாலா கேள்வித்தாள்


பகுதி – 1
கீழ்க்கண்ட கேள்விகளுக்கு நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுதான் சரியான விடை. அவற்றில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
மொத்த மதிப்பெண்கள்-50
1. வேங்கடாசல இதிஹாஸமாலா என்னும் நூலை எழுதியவர்.
அ) இராமானுசர். ஆ) முதலியாண்டான். இ) திருவரங்கத்தமுதனார். ஈ) அனந்தாழ்வான்.
2. இந்த நூல் அமைந்துள்ள மொழி.
அ) தமிழ். ஆ. தெலுங்கு. இ) ஸம்ஸ்கிருதம். ஈ) ஹிந்தி.
3. வேங்கடாசல இதிஹாஸமாலாவில் ஸ்தபகங்கள் என்று அழைக்கப்படும் எத்தனை உட்பிரிவுகள் உள்ளன.
அ) ஆறு. ஆ) ஏழு. இ) எட்டு. ஈ) ஒன்பது.
4. ‘ஸ்தபகம்’ என்றால்
அ) தூண். ஆ) பூங்கொத்து. இ) மலை. ஈ) மாலை
5. ஸ்ரீவேங்கடாசல இதிஹாஸமாலா
அ) உரைநடையில் அமைந்துள்ளது. ஆ) செய்யுள் வடிவில் அமைந்துள்ளது. இ) உரைநடையும் செய்யுளும் கலந்த வடிவில் அமைந்துள்ளது. ஈ) முக்கால் பகுதி செய்யுள் வடிவிலும் கால்பகுதி உரைநடையிலும் அமைந்துள்ளது.
6. வேங்கடாசல இதிஹாஸமாலையின்படி இராமானுசருடைய அவதாரம்
அ) ஆதிசேஷ அவதாரம். ஆ) பஞ்சாயுதங்களின் அவதாரம். இ) விஷ்வக்ஸேனரின் அவதாரம். ஈ) பார்த்தசாரதி பெருமாளின் அவதாரம்.
7. ஸ்ரீவேங்கடாசல இதிஹாஸமாலாவின்படி வைகானஸ அர்ச்சகர்கள் திருமலையைவிட்டு நீங்கியதற்கான காரணம்
அ) ராஜதண்டனைக்கு அஞ்சி. ஆ) சந்ததிகள் அற்றுப்போனதால். இ) எல்லோரும் இறந்துவிட்டதால். ஈ) பெருமாளிடம் அபசாரப்பட்டதால்.
8. வேங்கடாசல மாஹாத்மியம் சொல்லப்பட்டுள்ளது
அ) பிரும்மாண்ட புராணம். ஆ) விஷ்ணு புராணம். இ) பாகவத புராணம். ஈ) லிங்க புராணம்
9. ஸ்வாமி புஷ்கரிணி என்றால்
அ) சந்திர புஷ்கரிணியை குறிக்கும். ஆ) திருமலையில் உள்ள கோனேரியைக் குறிக்கும். இ) பொற்றாமரைக் குளத்தைக் குறிக்கும். ஈ) கல்யாணி புஷ்கரிணியைக் குறிக்கும்.
10. ஸ்வாமி புஷ்கரிணியின் கரையில் எழுந்தருளியிருப்பவர்
அ) கிருஷ்ணன். ஆ) இராமன். இ) வராஹன். ஈ) நரசிம்ஹன்.
11. திருவேங்கடமுடையானை மங்களாசாஸனம் செய்தருளிய ஆழ்வார்கள்
அ) பன்னிரண்டு. ஆ) பதினொன்று. இ) பத்து. ஈ) ஒன்பது.
12. ஆழ்வார்களின் தலைவராக கொள்ளப்படுபவர்
அ) திருமங்கையாழ்வார். ஆ) பொய்கையாழ்வார். இ) குலசேகராழ்வார். ஈ) நம்மாழ்வார்.
13. வில்வ இலைகளைக் கொண்டு வழிபடுவதற்கு உரிய தெய்வம்
அ) திருமகளோடு கூடிய திருமால். ஆ) சிவன். இ) சுப்ரமண்யன். ஈ) விநாயகன்.
14. இதற்கான ப்ரமாண வசனம் அமைந்துள்ளது
அ) ஸ்ரீஸூக்தத்தில். ஆ) ஸ்ரீ விஷ்ணு ஸூக்தத்தில். இ) புருஷ ஸூக்தத்தில். ஈ) நீளா ஸூக்தத்தில்.
15. ஸ்ரீவேங்கடேச ஸஹஸ்ரநாமாத்யாயம் அமைந்துள்ளது.
அ) ஸ்ரீ விஷ்ணு புராணம். ஆ) வாமன புராணம். இ) பிரும்மாண்ட புராணம். ஈ) லிங்க புராணம்.
16. திருமாலின் மார்பில் காலால் உதைத்த ரிஷியின் பெயர்.
அ) துர்வாஸர். ஆ) ப்ருகு. இ) மார்க்கண்டேயர். ஈ) விசுவாமித்திரர்.
17. சைவர்களுக்கும், இராமானுசருக்கும் இடையே நிகழ்ந்த வாதப்போர் நடந்தது.
அ) சோழமன்னன் அரசவையில். ஆ) பாண்டிய மன்னன் அரசவையில். இ) யாதவராஜன் அரசவையில். ஈ. தொண்டை மன்னன் அரசவையில்.
18. ‘ஸமாக்யை’ என்ற சொல்லுக்கு பொருள்
அ) காரணப்பெயர். ஆ) வினைத்தொகை. இ) ஆகுபெயர். ஈ) வினைமுற்று.
19. வ்யூஹ லக்ஷ்மியின் அடையாளங்களில் ஒன்று.
அ) நான்கு கரங்களோடு கூடியிருப்பது. ஆ) இரண்டு கரங்களோடு காணப்படுவது. இ) கையில் சங்கு சக்கரம் தரித்திருப்பது. ஈ) ஒரு கையை அபயஹஸ்தமாகக் கொண்டிருப்பது.
20. ஆனந்த ஸம்ஹிதை என்பது
அ) பாஞ்சராத்ர ஸம்ஹிதை. ஆ) வைகானஸ ஸம்ஹிதை. இ) சாக்த ஸம்ஹிதை. ஈ) ஸ்ம்ருதி.
21. இராமானுசர் காலத்திற்கு முன்பு உத்ஸவமூர்த்தியாய் ஆராதிக்கப்பட்டு வந்தவர்
அ) மலைக்கினியநின்ற பெருமாள். ஆ) வேங்கடத்துறைவார். இ) திருமலையப்பன். ஈ) நாராயணன்.
22) இராமானுசரால் நியமிக்கப்பட்ட வைகானஸ பிரதம அர்ச்சகர் திருநாமம்
அ) பார்த்தசாரதி. ஆ) செங்கனிவாயர். இ) ஸ்ரீனிவாஸன். ஈ) உலகளந்தான்.
23. திருமலை திருக்கோயிலில் மேற்கு நோக்கி எழுந்தருளப்பண்ணப்பட்டிருக்கும் நரஸிம்ஹமூர்த்தி முன்பு எழுந்தருளியிருந்த இடம்
அ) சந்திர புஷ்கரிணியின் மேற்கு கரையில். ஆ) சந்திர புஷ்கரிணியின் கிழக்கு கரையில்.
இ) பாபவிநாச தீர்த்தக்கரையில், ஈ) கீழ்த்திருப்பதி.
24. திருமலையில் திருவேங்கடமுடையானின் அப்ரதிக்ஷிண புறப்பாடு நடைபெறுவது
அ) புரட்டாசி ப்ரஹ்மோத்ஸவத்தின்போது. ஆ) அத்யயனோத்ஸவத்தின்போது. இ) கார்த்திகை ப்ரஹ்மோத்ஸவத்தின்போது. ஈ) பங்குனி ப்ரஹ்மோத்ஸவத்தின்போது.
25. திருவேங்கடமுடையான் மோவாயில் பச்சைக்கற்பூரத்தை அணிவிப்பதற்கான காரணம்
அ) அனந்தாழ்வான் எறிந்த கடப்பாறை அந்த இடத்தில் பட்டதால். ஆ) தொண்டைமான் சக்கரவர்த்திக்கு சக்ராயுதத்தை அளித்திடும்போது ஏற்பட்டவடு. இ) ப்ருகு மகரிஷி எறிந்த கல்லால். ஈ) பசுக்களைக் கறந்திடும்போது  ஏற்பட்டவடு.
26. இராமானுசருக்கு திருமலைநம்பி ஸ்ரீராமாயண காலக்ஷேபம் ஸாதித்த இடம்
அ) திருமலை புஷ்கரிணிக் கரையில். ஆ) அடிப்புளியின் அடிவாரத்தில். இ) கீழ்த்திருப்பதியில். ஈ) கபில தீர்த்தக் கரையில்.
27. ஸ்ரீவேங்கடேச ரகஸ்யாத்யாயம் அமைந்துள்ளது
அ) பவிஷ்யோத்ர புராணம். ஆ) ப்ரஹ்மாண்ட புராணம். இ) மார்க்கண்டேய புராணம். ஈ) சைவ புராணம்.
28. “கோவிந்தா கோவிந்தா” என்று திருவேங்கடமுடையான் திருநாமத்தை கூவிக்கொண்டு மலைமேல் ஏற வேண்டும் என்ற குறிப்பு அமைந்துள்ளது.
அ) வராஹ புராணம். ஆ) நாரத புராணம். இ) பாகவத புராணம். ஈ) வாமன புராணம்.
29. பெரிய திருமலைநம்பி அவதரித்தருளியது
அ) சித்திரை ஸ்வாதி. ஆ) வைகாசி விசாகம். இ) ஆனி அனுஷம். ஈ) மாசி புனர்பூசம்.
30. பெரியதிருமலைநம்பியின் ஆசாரியர் திருநாமம்
அ) நாதமுனிகள். ஆ) உய்யக்கொண்டார். இ) மணக்கால்நம்பி ஈ) ஆளவந்தார்.
31. பிள்ளை திருமலைநம்பிகளுக்கு இன்னொரு பெயர்
அ) தோழப்பர். ஆ) ஆஸூரியார். இ) கோமடத்தார். ஈ) வாதூõலதேசிகர்.
32. பிள்ளைத்திருமலைநம்பியின் கோத்ரம்
அ) பாரத்துவாஜ கோத்ரம். ஆ) கௌண்டின்ய கோத்ரம். இ) கபில கோத்ரம். ஈ) வாதூல கோத்ரம்.
33. தண்ணீரமுது உத்ஸவம் திருமலையில் நடைபெறுவது.
அ) அத்யயனோத்ஸவத்தின் இறுதியில். ஆ) புரட்டாசி ப்ரஹ்மோத்ஸவத்தில். இ) கார்த்திகை ப்ரஹ்மோத்ஸவத்தில். ஈ) பங்குனி ப்ரஹ்மோத்ஸவத்தில்.
34. அனந்தாழ்வான் அவதரித்தது
அ) திருவரங்கத்தில். ஆ) காஞ்சீபுரத்தில். இ) கர்நாடக மாநிலம் சிறுப்புத்தூரில். ஈ) திருமலையில்.
35. அனந்தாழ்வான் திருநக்ஷத்ரம்
அ) சித்திரையில் சித்திரை. ஆ) வைகாசி விசாகம். இ) ஐப்பசி மூலம். ஈ) பங்குனி ஹஸ்தம்
36. அனந்தாழ்வான் திருமலை செல்வதற்கு காரணமாய் அமைந்த திருவாய்மொழி பாசுரம்
அ) 1-1-1 ஆ) 3-3-2 இ) 4-1-1 ஈ) 10-10-11
37. திருமலையில் யமுனைத்துறைவர் மண்டபத்தை நிர்மாணித்தவர்
அ) பெரிய திருமலைநம்பி. ஆ) இராமானுசர். இ) முதலியாண்டான். ஈ) அனந்தாழ்வான்.
38. “அகிலாத்மகுணாவாஸம் அஜ்ஞாநதிமிராபஹம் ந ஆச்ரிதாநாம் ஸுசரணம் வந்தே னந்தார்ய தேசிகம் நந என்ற  தனியனை யார் அருளிச்செய்தார்.
அ) இராமானுசர். ஆ) நஞ்சீயர். இ) பட்டர். ஈ) ஸாக்ஷாத் திருவேங்கடமுடையான்.
39. ‘ஸ்ரீமத்ராமாநுஜார்ய ஸ்ரீபாதாம்போருஹத்வயம்’ என்று குறிப்பிடப்படுபவர்
அ) முதலியாண்டான். ஆ) கூரத்தாழ்வான். இ) சோமாஸியாண்டான். ஈ) அனந்தாழ்வான்.
40. அனந்தாழ்வானின் புருஷகாரம் கொண்டு திருவேங்கடமுடையான் மோக்ஷம் அளித்தது
அ) சிறியாண்டானுக்கு. ஆ) பெரியாண்டானுக்கு. இ) மிளகாழ்வானுக்கு. ஈ) சோமாஸியாண்டானுக்கு.
41. திருவேங்கடமலையில் பெருமானின் திவ்ய ஐச்வரியத்தை பாதுகாப்பதற்காக தமது பிரதிநிதியாய் இராமானுசர்
அ) ஸ்ரீஸேனாபதி ஜீயரை நியமித்தார். ஆ) திருமலைநம்பி வம்சத்தாரை நியமித்தார். இ) அனந்தாழ்வான்  வம்சத்தவரை நியமித்தார். ஈ) முதலியாண்டான் வம்சத்தவரை நியமித்தார்.
42. இவ்வாறு நியமிக்கப்பட்டவரின் திருவாராதனப்பெருமாள்
அ) சக்கரவர்த்தி திருமகன். ஆ) கிருஷ்ணன். இ) வராஹன். ஈ) நரசிம்ஹன்
43. திருமலையில் இராமானுசருடைய விக்ரஹ ப்ரதிஷ்டையை செய்தவர்
அ) கந்தாடையாண்டான். ஆ) அனந்தாழ்வான். இ) கூரத்தாழ்வான். ஈ) சோமாஸியாண்டான்.
44. திருமலையில் இராமானுசர் காலத்தில் எழுந்தருளியிருந்த அரையருடைய திருநாமம்
அ) திருவேங்கடநாத அரையர். ஆ) பிள்ளைத்திருநறையூர் அரையர். இ) நாதமுனி அரையர். ஈ) சம்பத்குமார் அரையர்.
45. பாரபத்யகாரர் என்றால்
அ) திவ்யப்ரபந்தம் ஸேவிக்கும் அதிகாரி. ஆ) பெருமாளுக்கு நடைபெறும் கைங்கர்யங்கள் அனைத்தையும் மேற்பார்வையிடும் அதிகாரி. இ) வேதவிண்ணப்பம் செய்வார். ஈ) பூமாலை ஸமர்ப்பிப்பார்.
46. அனந்தாழ்வான் திருமதில் எடுத்திடும்போது இடையூறாய் நின்ற எந்த மரம் தானே நகர்ந்து வழிவிட்டது.
அ) செண்பகமரம். ஆ) புளியமரம். இ) பனைமரம். ஈ) சந்தனமரம்
47. வெள்ளிக்கிழமை திருமஞ்ஜனத்தின்போது ஸேவிக்கப்படும் திவ்யப்பிரபந்தம்
அ) திருப்பாவை. ஆ) நாச்சியார் திருமொழி. இ) பெருமாள் திருமொழி. ஈ) திருமாலை.
48. திருமலையில் சின்ன ஜீயர் பட்டத்தை ஏற்படுத்தியவர்.
அ) இராமானுசர். ஆ) அனந்தாழ்வான். இ) முதலியாண்டான். ஈ) மணவாளமாமுனிகள்.
49. திருமலைக்கான பதிகங்கள் திருவாய்மொழியில் அமைந்துள்ளவை.
அ) 3-3 மற்றும் 6-10 ஆ) 4-10 மற்றும் 8-10. இ) 2-10 மற்றும் 7-10. ஈ) 5-10 மற்றும் 9-10.
50. கோவிந்தராஜனுக்கு ப்ரஹ்மோத்ஸவம் நடைபெறுவது
அ) ஆனி மாதத்தில். ஆ) ஆடி மாதத்தில். இ) ஆவணி மாதத்தில். ஈ) கார்த்திகை மாதத்தில்.


2)கீழ்க்கண்ட சொற்றொடர்களை கோடிட்ட இடங்களில் தகுந்த சொல்லை இட்டு முழுமை செய்யவும்.                            மொத்த மதிப்பெண்கள். 50.
1. அனந்தாழ்வான் திருமலையில் ————கைங்கர்யம் செய்து வந்தார்.
2. வேங்கடாசல இதிஹாஸமாலா என்பதற்கு தமிழில் ————- என்ற பெயர் வழங்கி வருகிறது.
3. செந்தமிழ்பாடுவார் என்று திருமங்கையாழ்வாரால் சிறப்பித்து கூறப்பட்டவர்கள் ———- ஆவர்.
4. திருவரங்கப்பெருமாள் அரையர் ————- குலத்தைச் சார்ந்தவர்.
5. “படியாய்க்கிடந்து உன்பவளவாய்க் காண்பேனே” என்றருளிச் செய்தவர் ———– ஆழ்வார்.
6.  வேங்கடத்து அரி என்றால் திருமலையில் எழுந்தருளியிருக்கும் ———– குறிக்கும்.
7. அழகப்பிரானார் திருக்கிணறு திருமலையில் ————– திருச்சுற்றில் அமைந்துள்ளது.
8. திருவிருத்தம் ————– பாட்டில் நம்மாழ்வார் திருமலையை மங்களாசாஸனம் செய்துள்ளார்.
9. திருச்சந்தவிருத்தத்தில் திருமழிசையாழ்வார் காலநேமி என்னும் அசுரனை வதைசெய்தவன் திருவேங்கடமுதலியான் என்று ——————— என்ற பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்.
10. “ராமானுஜ பதச்சாயா” என்று கொண்டாடப்படுபவர் ———– ஆவார்.
11. ஸ்ரீ ராமானுஜர் பரமபதித்திடும்போது அனந்தாழ்வான் ————- கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். அவர் பரமபதித்ததை ஒரு ஸ்ரீவைஷ்ணவர் தெரிவிக்கக்கேட்டு துக்கம் அடைந்தார்.
12. வாரீர் அனந்தாழ்வானே! “நானன்றோ ராமானுஜமுனியாகிய ஒரு பெரிய நிதியை இழந்து விட்டேன்” என்று கூறினார் —————-.
13. ஆளவந்தார் குருகைக் காவளப்பனை சந்திக்கச் சென்றபோது அவர் ———– என்று வினவினார்.
14. பெரியதிருமலைநம்பி இராமானுசருக்கு ஸ்ரீராமாயண காலக்ஷேபம் முடிந்தவாறே ————- அவருக்கு ஆராதிக்க எழுந்தருளப்பண்ணிக் கொடுத்தார்.
15. திருமலைப்பகுதியை இராமானுசர் காலத்தில் ————– மன்னன் ஆண்டு வந்தான்.
16. எம்பெருமான் பொன்மலையில் ஏதேனும் ஆவேனே என்று ஆசைப்பட்டவர் ————— ஆழ்வார் ஆவார்.
17. “ஏய்ந்த பெருங்கீர்த்தி இராமானுசமுனி தன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகிறேன்” என்று தனியனிட்டவர் —————- ஆவார்.
18. அனந்தாழ்வான் ஏற்படுத்திவைத்த ஏரிக்கு ————— என்று அவர் பெயர் சூட்டினார்.
19. திருவேங்கட மலையில் ————- ஆகம முறைப்படி திருவாராதனங்களும் விழாக்களும் நடைபெற்று வருகின்றன.
20. ‘வானவர் நாட்டையும் நீ கண்டுகொள்ளென்று வீடும் தரும்’ என்று நம்மாழ்வார் திருவாய்மொழி ————— பாசுரத்தில் அருளிச்செய்துள்ளார்.
21. “என் பாபங்களை திருவேங்கடமுடையான் கணக்கில் கொண்டால் பழைய நரகங்கள் போதாமல் புதிய புதிய பெரிய நரகங்களை உண்டுபண்ண வேண்டியிருக்கும். ஆனால் அனந்தாழ்வானே உம்முடைய புருஷகாரத்தால் பரமபதம் அளித்தான்” என்று கூறியவர் ———— ஆவார்.
22. திருவேங்கடமுடையான் திருமலையப்பனை ஸேவிப்பதற்காக திருவரங்கத்திலிருந்து வாத்ஸய வரதாசார்யர் போன்ற ஸ்ரீவைஷ்ணவர்கள் திருமலை அடிவாரத்தில் பசித்து களைத்திருந்தபோது ப்ரஸாதம் அளித்து அவர்களுடைய பசியைப் போக்கினான் திருவேங்கடமுடையான். அப்போது அவன் தன்னை ————— என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.
23. “பரம்சென்றுசேர் திருவேங்கடமாமலை”  என்ற பாசுரச்சொற்றொடரை ————- திருவேங்கட முடையானிடம் பதிலாகக் கூறினார்.
24. “மதுரகவிதாஸன்” என்ற தாஸ்ய நாமம்  ————- வம்சத்தவர்களுக்கு வழக்கில் உள்ளது.
25. அனந்தாழ்வான் தன் மகளுக்கு ————- என்ற பெயரைச் சூட்டினார்.
26. பத்மாவதியை ஓரிரவு முழுவதும் ————– மரத்தில் கட்டி வைத்தார் அனந்தாழ்வான்.
27. அனந்தாழ்வான் கட்டிவைத்த பூமாலை தொடுக்கும் மண்டபத்திற்கு ———– என்று பெயர்.
28.  ஒரு பிரம்மசாரியின் உருவில் உதவி செய்ய வந்த திருவேங்கடமுடையான் மீது அனந்தாழ்வான் ————– எறிந்து காயப்படுத்தினார்.
29. அனந்தா நீயல்லவோ ஆண்பிள்ளை என்று ————- புகழ்ந்துரைத்தார்.
30. அனந்தாழ்வானை ————— திருவடிகளில் ஆச்ரயிக்கும்படி இராமானுசர் நியமித்தருளினார்.
31. “குருவி கழுத்தில் பனங்காயைக் கட்டினாற்போலே” என்று —————– கூறினார்.
32. அனந்தாழ்வானுடைய திருத்தகப்பனார் திருநாமம் ————— என்பதாகும்.
33. அனந்தாழ்வான் —————- கோத்திரத்தைச் சார்ந்தவர்.
34.  அனந்தாழ்வான் அவதரித்தது கலி ———– ஆண்டு.
35. தண்ணீரமுது உத்ஸவத்தில் தீர்த்தக் குடத்தை எழுந்தருளப்பண்ணிக் கொண்டு வரும்போது ————– ஆழ்வார் பாசுரங்களை திருவீதிகளில் ஸேவித்துக்கொண்டு வருவர்.
36. பெரியதிருமலைநம்பி பரமபதிக்கும்போது கூறிய வார்த்தைகளை திருவாய்மொழி ————— பாசுர வ்யாக்யானத்தில் நம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
37. பெரியதிருமலைநம்பிகள் ——————– திருவடிகளை நினைத்துக்கொண்டே நித்யவிபூதிக்கு எழுந்தருளினார்.
38. பெரியதிருமலைநம்பிகள் அவதரித்தது ————– மாதத்தில் ———– நக்ஷத்திரத்தில்.
39. பெரியதிருமலைநம்பிகள் தினந்தோறும் ————— இருந்து திருமஞ்ஜனத்தை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வருவார்.
40. வராஹப்பெருமாள் அவதாரம்  ————– மாதம் ————-திருநக்ஷத்திரத்தில்.
41. வராஹப்பெருமாள் ஸ்வாமி புஷ்கரிணியின் ————– கரையில் எழுந்தருளியுள்ளார்.
42. சைவர்கள் முன்வைத்த கூற்றுகளை இராமானுசர் 1———- 2———- 3———- ஆகிய புராண வசனங்களைக் கொண்டு மறுத்தார்.
43. பதினெட்டு புராணங்களைத் தொகுத்தவர்————— ஆவார்.
44. பேயாழ்வார் அருளிச் செய்த “தாழ்சடையும் நீள்முடியும்” என்று தொடங்கும் பாசுரம்———- திருவந்தாதியில் ———–பாசுரமாக அமைந்துள்ளது.
45. “மேயான் வேங்கடம் காயா மலர்வண்ணன்”  என்று தொடங்கும் பாசுரம் திருவாய்மொழி——– பத்தில்———– பாசுரம்.
46. லிங்கம் என்ற சொல்லிற்கு ————–என்பது பொருள்.
47. நாச்சியார்திருமொழியில்——— பாசுரங்கள் அமைந்துள்ளன.
48. இராமாநுசருக்கு முற்பட்ட காலங்களில் புரட்டாசி ப்ரஹ்மோத்ஸவத்தின் பெரும்பகுதி———- ஊரில் நடைபெற்று வந்தது.
49. குத்ருஷ்டிகள் என்றால்———– பொருளாகும்.
50. ஆண்டாள் திருக்கரத்தில் ஏந்தியிருப்பது ———– மலராகும்.


3) சரியா, தவறா? என்று குறிப்பிடவும்.                மொத்த மதிப்பெண்கள்-50


1. ஸ்ரீநிவாஸன் திருமார்பில் உள்ள வனமாலைக்கு வைஜயந்தி என்று பெயர்.                  சரி/தவறு.
2. பங்காருபாவி (பொற்கிணறு) கீழ்த்திருப்பதியில் உள்ளது.                 சரி/தவறு.
3. ஆழ்வார்கள் அனைவருக்கும் திருமலையில் ஸந்நிதிகள் அமைந்துள்ளன.        சரி/தவறு.
4. அழகப்பிரானார் கிணறு என்றாலும் பொற்கிணறு என்றாலும் ஒரே
கிணற்றைத்தான் குறிக்கும்.                                 சரி/தவறு.
5. புரட்டாசி ப்ரஹ்மோத்ஸவத்தின் 8ஆம் நாள் திருத்தேர் உத்ஸவம்.             சரி/தவறு.
6. அனந்தாழ்வானின் அவதாரமாகக் கொள்ளப்படுவது ஒரு செண்பகமரம்.        சரி/தவறு.
7. இராமானுசர் பெரியதிருமலைநம்பியிடம் ஸ்ரீராமாயணம் கேட்டது திருமலையில்.    சரி/தவறு.
8. நாதமுனிகளின் சிஷ்யர் பெரியதிருமலைநம்பி.                    சரி/தவறு.
9. பராங்குசன் என்றாலும் நம்மாழ்வார் என்றாலும் ஒருவரையே குறிக்கும்.        சரி/தவறு.
10. பெரியதிருமலைநம்பி தினந்தோறும் கபில தீர்த்தத்திலிருந்து திருமஞ்சனக்
குடங்களைச் சுமந்து வருவார்.                            சரி/தவறு.
11. திருமலைநாத தாதஆசார்யன் என்றால் அனந்தாழ்வானைக் குறிக்கும்.        சரி/தவறு.
12. திருமலைநம்பிகள் சித்திரையில், சித்திரை நாள் அவதரித்தார்.              சரி/தவறு.
13. திருமலைநம்பிகளின் அபிமான குமாரரின் பெயர் பிள்ளைத் திருமலைநம்பி.    சரி/தவறு.
14. பெரியதிருமலை நம்பியின் திருவாராதனப் பெருமாள் சக்ரவர்த்தித் திருமகன்.    சரி/தவறு.
15. அனந்தாழ்வான் கர்னாடக மாநிலம் மேல்கோட்டையில் அவதரித்தவர்.        சரி/தவறு.
16. பெரியதிருமலை நம்பியும் அனந்தாழ்வானும் பாரத்வாஜ கோத்ரத்தைச் சார்ந்தவர்கள் சரி/தவறு.
17. அருளாளப்பெருமாள் எம்பெருமானார் பூர்வாச்ரமத் திருநாமம்
யஜ்ஞமூர்த்தி என்பதாகும்.                                சரி/தவறு.
18. “ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி” என்று தொடங்கும் பதிகம்
பெரியதிருமொழி 3-3.                                 சரி/தவறு.
19. புஷ்ப மண்டபம் என்றால் காஞ்சிபுரத்தைக் குறிக்கும்.                சரி/தவறு.
20. “மந்திபாய் திருவேங்கட மாமலை” என்று பாசுரமிட்டவர் கலியன்.        சரி/தவறு.
21. “கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே” என்று
ஆசைப்பட்டவர் குலசேகராழ்வார்.                            சரி/தவறு.
22. தொண்டரடிப் பொடியாழ்வார் திருவேங்கடவனைத் தாம் அருளிச்
செய்த திருமாலையில் மங்களாசாஸனம் செய்துள்ளார்.                சரி/தவறு.
23. யாமுனர் என்றால் ஆளவந்தாரைக் குறிக்கும்.                    சரி/தவறு.
24. அனந்தாழ்வானின் வழித்தோன்றல்கள் தம்மை மதுரகவிதாஸர் என்று கூறிக் கொள்வர். சரி/தவறு.
25. ஸ்ரீவைஷ்ணவ ஸந்யாசிகளை முக்கோல் பகவர் என்று அழைப்பர்.                சரி/தவறு.
26. மாருதிசிறியாண்டான் அனந்தாழ்வானை முன்னிட்டுக் கொண்டு
பரமபதத்தை அடைந்தார்.                                 சரி/தவறு.
27. இராமானுசர் திருவாய்மொழி 6-10 பதிகத்தை விரித்துரைக்கும் போது அனந்
தாழ்வான் தான் அவருடைய விருப்பப்படி திருமலைக்குச் சென்று புஷ்ப கைங்
கர்யம் செய்வதற்கு முன் வந்தார்                            சரி/தவறு.
28. “இராமானுசப் பேரேரி” என்னும் நீர்நிலை கீழ்த்திருப்பதியில் உள்ளது.        சரி/தவறு.
29. அனந்தாழ்வானின் திருக்குமாரரின் திருநாமம் இராமானுசன்.            சரி/தவறு.
30. “வைகுண்டாத்ரி” என்றால் திருமலையைக் குறிக்கும்.                சரி/தவறு.
31. மேருமலையின் மகன் திருவேங்கடமலை.                    சரி/தவறு.
32. மரணமடைந்தவர்களை திருமலையில் எரியூட்டுவது கூடாது.            சரி/தவறு.
33. திருமலையில் திருவேங்கடமுடையான் தரித்துக் களைந்த மாலைகளை
நாம் சூட்டிக் கொள்ளலாம்.                                சரி/தவறு.
34. விஷ்வக்ஸேனர் என்றாலும் ஸ்ரீ சேனாபதியாழ்வான் என்றாலும் ஒருவரையே குறிக்கும். சரி/தவறு.
35. ஸ்வாமி புஷ்கரிணியில் நீராடி ஸ்ரீவராஹப்பெருமாளை ஸேவித்தபிறகே
திருவேங்கடவனை தரிசிக்கச் செல்ல வேண்டும்.                    சரி/தவறு.
36. ஸ்ரீவராஹமூர்த்தி திருக்கோயிலில் பலி ஸாதிப்பது நடைமுறையில் உண்டு.    சரி/தவறு.
37. விஷ்வக்ஸேன ஏகாங்கிக்கு திருவேங்கடநாத (அப்பன்) சடகோப ஜீயர் என்ற
திருநாமம் சாற்றப்பட்டது விகாரி வருஷம், தை மாதம், சுக்லபக்ஷ வெள்ளிக்கிழமை.  சரி/தவறு.
38. சடகோப ஜீயருக்கு கைங்கர்யத்தில் உதவி செய்வதற்காக 4 ஏகாங்கிகளை
இராமானுசர் நியமித்தருளினார்.                            சரி/தவறு.
39. இராமானுசர் நாடெங்கும் வைணவம் தழைத்தோங்குவதற்காக 74
ஸிம்ஹாசனாதிபதிகளை நியமித்தருளினார்.                    சரி/தவறு.
40. பாத்மோத்தர புராண வசனப்படி “சகல நற்பண்புகளோடு கூடியவனே”
ஆசார்யனாய் இருக்கத் தகுந்தவன் என்று பெறப்படுகிறது.                சரி/தவறு.
41. ஏகாங்கிகளின் எண்ணிக்கையை நான்கிலிருந்து அதிகப்படுத்தக்கூடாது
என்று இராமானுசர் தடை விதித்துள்ளார்.                        சரி/தவறு.
42. ஸ்ரீமந்நாதமுனிகள் அவதரித்தது சொட்டைக்குலம்.                சரி/தவறு.
43. திருவேங்கடமுடையான் தனது சங்கு சக்ரங்களை தொண்டைமான்
சக்ரவர்த்திக்கு போரில் வெற்றி கொள்வதற்காக அளித்தான்.             சரி/தவறு.
44. சைவர்கள்  திருமலையில் கோயில் கொண்டிருப்பவன் சிவன் என்றும்
கந்தன் என்றும் வாதிட்டனர்.                             சரி/தவறு.
45. திருமலை அத்யயனோத்ஸவத்தில் திருப்பல்லாண்டு
தொடங்கி ஸேவிக்கப்படும்.                            சரி/தவறு.
46. திருமலைக்குச் செல்லும் வழியில் அடிப்புளியின் அண்மையில்
திருவேங்கடமுடையானின் திருவடித்தாமரை இணையினைக் காணலாம்.         சரி/தவறு.
47. திருமலையில் திருவேங்கடமுடையான் எழுந்தருளியிருக்கும் விமானத்திற்கு
ப்ரணவாகார விமானம் என்று பெயர்.                        சரி/தவறு.
48. “அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின்” என்ற சொற்றொடர்
திருவாய்மொழி 6-10-11இல் அமைந்துள்ளது.                    சரி/தவறு.
49. திருவேங்கடவனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் முதலாழ்வார்கள்.        சரி/தவறு.
50. வேங்கடாசல இதிஹாஸமாலா ஸம்ஸ்க்ருத மொழியில் அமைந்துள்ள ஓர் நூலாகும். சரி/தவறு.


4) சிறு குறிப்பு வரைக.                 ஒவ்வொரு கேள்விக்கும் 5 மதிப்பெண்.
ஒவொரு கேள்விகளுக்கும் 10 வரிகளுக்கு மிகைப்படாமல் எழுதவும். அதிக வரிகள் கொண்ட விடைத்தாள்களுக்கு குறைந்த மதிப்பெண்கள் வழங்கப்படும்.
1. அனந்தாழ்வான் திருவேங்கடமுடையானுக்கு மாமனாராகக் கொள்ளப்படுகிறார். ஏன்? அதைத் தற்போது நினைவில் கொள்ளும் வகையில் திருமலையில் என்ன நிகழ்ச்சி நடைபெறுகிறது?
2. “ஸ்தபகம்” என்றால் என்ன பொருள்? அனந்தாழ்வானின் பண்புகள், கைங்கர்யங்கள் ஆகிய வற்றிலிருந்து சிலவற்றை 6ஆம் ஸ்தபகத்தில் இருந்து எழுதவும்.
3. திருமலை நம்பிகள் இராமானுசருக்கு ஸ்ரீராமாயண காலக்ஷேபம் ஸாதித்த வைபவத்தை எழுதவும்.
4. கோவிந்தராஜனும், திருமலையப்பனும் ஒருவரே என்று எவ்வாறு நிரூபணம்செய்யப்பட்டுள்ளது?
5. பாரபத்தியக்காரரின் பணிகள் யாவை?
6. திருவேங்கடமலையில் கோயில் கொண்டிருப்பவன் சிவன் என்ற வாதத்தை இராமானுசர் எவ்வாறு முறியடித்தார்?
7. திருவேங்கடமலையில் கோயில் கொண்டிருப்பவன் கந்தன் என்ற வாதத்தை இராமானுசர் எவ்வாறு முறியடித்தார்?
8. திருவேங்கடமுடையானுக்கு திருமண்காப்பு அணிவித்திடும் வைபவத்தை விவரித்திடுக.
9. உத்ஸவ, கௌதுக மூர்த்திகளை ஏன் இராமானுசர் மாற்றியமைத்தார்?
10. ஆசார்ய புருஷலக்ஷணம் வேங்கடாசல இதிஹாஸமாலாவில் எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது?
***

Pavithrotsavam part 2

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:
“பவித்ரோத்ஸவம்” – (19.08.2010 தொடங்கி 28.08.2010 ஈறாக) பகுதி-2

21. ஆண்டுதோறும் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமானுக்கு அமுதுபடிகள், வஸ்திரங்கள், திருவாரா தனங்கள், அர்க்ய பாத்ய ஆசமனீயம், போன்ற உபசாரங்கள், மந்திர உச்சாடனம் ஆகியவற்றில் குறைபாடுகள் நேர வாய்ப்புண்டு. இவ்வாறு ஏற்படும் குறைபாடுகளைப் போக்குதற்காக ஆகமங்களில் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
22. எம்பெருமானிடம் உள்ள ஸாந்நித்யம் குறையாது இருப்பதற்கு ப்ராயச்சித்தமாக பல உத்ஸவங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. அமுதுபடிகள் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் லோபத்தை (குறைபாடுகளை) நீக்குதற்பொருட்டு ஜ்யேஷ்டாபிஷேகத்திற்கு அடுத்த நாள் “பெரியதிருப்பாவாடை” என்ற நிகழ்ச்சியும், வஸ்திரங்கள் அணிவிப்பதில் ஏற்படும் குறைபாடுகளைக் களைவதற்காகக் கார்த்திகை கைசிக ஏகாதசியன்று “360 பட்டு போர்த்துதல்” என்ற நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. திருவாராதனம் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் மந்திர லோபம் ஆகியவற்றை நீக்குவதற்காகப் “பவித்ரோத்ஸவம்” கொண்டாடப் படுகிறது.
23. உள்ளே இருக்கும் ஒவ்வொரு மூர்த்திக்கும் 360 ஆவ்ருத்தி தீபாராதனம் நடக்கையில் ஒவ்வொரு திருவாராதனத்தின் முடிவிலும் பெரியபெருமாளுக்குத் திருமுடி முதல் திருவடி வரையில் பவித்ரம் சாற்றப்படும். இன்றைய வேதபாராயணமும் முந்தைய தினத்தைப்போலவே. ஆனால், துவாதசியாகையால் அச்சித்ரம், அச்வமேதங்களுக்கு பதிலாக காடகம் பாராயணம் செய்யப்படும்.
24. மற்றைய மூர்த்திகளுக்கும் பவித்திரம் சாற்றிய பிறகு, தாயார் ஸந்நிதிக்கு மேளதாளத்துடன் பவித்திரம் கொண்டு செல்லப்பட்டு அங்கே தாயார் திருமேனிகளுக்கு சாற்றப்படும் வரையில் பெரியபெருமாளும் நம் பெருமாளும் பல பவித்திரங்களோடு ஜனங்களுக்கு ஸேவை ஸாதித்துக் கொண்டிருப்பார்கள்.
25. வனமாலை, அங்கோபாங்கம் முதலிய பவித்திரங்களோடு இன்று பெரியபெருமாள் சேவை சாதிப்பார்.
26. இந்த சேவைக்குப் பூச்சாண்டி சேவை என்ற பெயர் வழங்குகிறது. (பெரியபெருமாள் திருமேனி முழுவதும் பவித்ரத்தை (புனிதத்தன்மையை) உண்டு பண்ணும் பவித்ரம் (முடிச்சுக்கள் கொண்ட தர்ப்பங்கள்)   சாற்றப்படுகிறது. சிறு குழந்தைகள் புதியதோர் பழக்கமில்லாத தோற்றத்தைக் காணும்போது பூச்சாண்டி என்று சொல்லும். அதுபோலே இன்று பெரியபெருமாள் திருமேனியில் திருப்பாதங்கள் தொடங்கி திருமுடி ஈறாக நூற்றுக்கணக்கான பவித்ரங்கள் சாற்றப்பட்டிருக்கும். இத்துடன் மூலவரும், உத்ஸவரும் பல வண்ணங்கள் கொண்ட பட்டினால் ஆன பவித்ர மாலையையும் சாற்றிக் கொண்டிருப்பர்.)
27. கும்பஹாரத்திக்காக திருமடைப் பள்ளியிலிருந்து ‘தட்டி’ (தட்டி என்பது திருமடைப்பள்ளியிலிருந்து எடுத்துவரப்படும் சிறு தீபமாகும். இரண்டு தீபங்கள் கொண்டு வரப்படும். அவற்றில் ஒன்று மட்டும் உபயோகத்தில் கொள்ளப்படும். ஒன்று அணைந்து போனாலும் மற்றொன்றைப் பாதுகாப்பாக எடுத்து வரலாம் என்பதற்காக 2 தீபங்கள் கொண்டு வரப்படுகின்றன.) கொண்டு வரப்படும்.
28. ‘பெரியஅவசர’த் தளிகை எழுந்தருளப்பண்ணப்படும்.
29. பெரியபெருமாள் சாற்றிக் கொண்டிருக்கும் அங்கோ பாங்க பவித்திரங்களைக் களைந்து ஆழ்வாராசார்யாள் முதலிய ஒவ்வொரு ஸந்நிதிக்கும் கொடுத்து, தளிகை அமுது செய்த பிறகு, நம்பெருமாள் பட்டுப் பவித்திரம் சாற்றிக் கொண்டு தோளுக்கினியானில் புறப்பட்டு பவித்ரோத்ஸவ மண்டபத்திற்கு எழுந்தருளுவார்.
30. 7ஆம் உத்ஸவச் சிறப்பு: நம்பெருமாள் உபயநாய்ச்சிமார்களுடன் திருச்சிவிகையில் எழுந்தருளி ஸந்நிதி வாசலில் சூர்ணாபிஷேகம் செய்து கொண்டு புறப்பட்டு, கொட்டார வாசலில் நெல்லளவையும் ஸ்ரீரங்கநாய்ச்சியார் ஸந்நிதி வாசலில் திருவந்திக்காப்பும் கண்டருளிப் பிரதக்ஷிணமாய் வந்து உள்ளே எழுந்தருளுவார்.
31. உபயநாய்ச்சிமாருடன் எழுந்தருளும் பெரிய ஆஸனமான திருச்சிவிகை பவித்ரோத்ஸவ மண்டபமேறித் திரும்பாதாகையால் இன்று நம்பெருமாள் மண்டபமெழுந்தருளுவதில்லை.
32. 8ஆம் திருநாள்: இரவு நம்பெருமாள் உள்ளே எழுந்தருளியதும் பவித்திரங்களைக் களைந்து சயனமூர்த்திக்கு சயன உபசாரம் நடக்கும்.
33. 9ஆம் திருநாள் சாற்றுமுறை: காலையில் நித்தியப்படி போல நம்பெருமாள் பொங்கல் அமுது செய்து, சந்திரபுஷ்கரிணிக்கு எழுந்தருளித் தீர்த்தவாரி கண்டருளி, மண்டபத்தில் திருமஞ்சனம் முதலியவை ஆனதும் புறப்பட்டு உள்ளே எழுந்தளுவார்.
34. நம்பெருமாள் உள்ளே எழுந்தருளியதும் யாகசாலையிலிருந்து திருவரங்க மாளிகையார் உள்ளே எழுந்தருளுவார். வாதூலதேசிகரை மஹா வைபவத்தோடு திருமாளிகையிலிருந்து எழுந்தருளப்பண்ணிக் கொண்டு வந்து, ஸந்நிதி வாசலில் அவருக்குப் பவித்திரம் விநியோகம் செய்யப்படும். கோஷ்டிக்கும் பவித்திர விநியோகமாகி, வாதூலதேசிகர் பெரியபெருமாளுடைய அனைத்துக் கொத்து பரிஜனங்களுடனும் புறப்பட்டு, பிரம்மரத மரியாதையாகத் திருமாளிகையெழுந்தருளி சந்தன தாம்பூல மரியாதையான பிறகு, புஷ்கரிணிக் கரையில் குலசேகராழ்வாரால் எப்பொழுதும் மங்களாசாஸனம் பண்ணப்படும். சக்ரவர்த்தித் திருமகனுக்கு தன்னை ஆராதித்தற்காகப் பெரியபெருமாள் தம்முடைய பிரஸாதமான பவித்திரத்தை மேளதாளத்துடன் அனுப்பி வைப்பார்.

 

Pavithrotsavam Details for Srirangam 1 of 2

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

“பவித்ரோத்ஸவம்” – (19.08.2010 தொடங்கி 28.08.2010 ஈறாக) பகுதி 1

1. ஒவ்வொரு திருக்கோயில்களும் ஆண்டுதோறும் ஆவணி அல்லது புரட்டாசி மாதங்களில் பவித்ரோத்ஸவம் 3 அல்லது 5 அல்லது 7 அல்லது 9 நாட்களுக்குக் கொண்டாடப்படும். எம்பெருமானுக்குத் திருவாராதனம் ஸமர்பிக்கப்படும் போதும் மற்றைய உத்ஸவங்களிலும் மந்த்ர லோபம் (குறைவு) ஏற்படக்கூடும். அதனால் எம்பெருமானுடைய ஸாந்நித்யம் குறைய வாய்ப்பு உண்டு. அவ்வாறு ஏற்படும் குறைகளைப் போக்குவதற்காகப் பவித்ரோத்ஸவம் கொண்டாடப்படுகிறது.
2. நம்பெருமாள் கண்டருளும் பவித்ரோத்ஸவம் சேனை (சேரனை) வென்றான் மண்டபத்தில் (பவித்ரோத்ஸவ மண்டபத்தில்) தற்போது நடைபெற்று வருகிறது.
3. நம்பெருமாள் கலாபத்திற்குப் பிறகு கி.பி. 1371 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 17ஆம் நாள் திருவரங்கத்திற்குத் திரும்பி எழுந்தருளிய தினத்தன்று இந்த மண்டபத்தில்தான் உபயநாய்ச்சிமார்களோடு எழுந்தருளியிருந்தார்.
4. முதலாழ்வார்கள் ஸந்நிதியின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள 12.08.1530-ஆம் தேதியிட்ட விஜயநகர மன்னனான மல்லிகார்ஜுனன் காலத்துக் கல்வெட்டின்படி (அ.கீ.Nணி.343 ணிஞூ 1952/53) பவித்ரோத்ஸவ மானது முதலாழ்வார்கள் திருமண்டபத்தில் நடை பெற்றதாகவும், சாற்றுமுறையன்று விட்டவன்விழுக்காடு (பிரஸாதத்தில் நான்கில் ஒரு பங்கு) அண்ணன் ராமாநுஜ அய்யன் என்பாருக்குத் தரவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
5. காலப்போக்கில் முதலாழ்வார் ஸந்நிதிக்கு பவித்ரோத்ஸவ காலங்களில் நம்பெருமாள் எழுந்தருளுவது நின்றுபோய் சேரனை வென்றான் மண்டபத்திற்கு எழுந்தருளுவது என்ற முறை ஏற்பட்டுள்ளது.
6. பவித்ரோத்ஸவத் திருநாளுக்கு முதல்நாள் மாலை ஸேனை முதலியார், ஹநுமான் ஆகியோருக்குத் திருவாராதனம் ஸமர்ப்பிக்கப்பட்டு, பெருமாள் ‘க்ஷீரான்னம்’ அமுது செய்த பிறகு புறப்பட்டருளி, நாய்ச்சியார் ஸந்நிதி வில்வ மூலத்திலிருந்து பாலிகைகளுக்காக மண் எடுத்துக் கொண்டு வருவார்கள்.
7. பவித்ரோத்ஸவம் முதல்நாள் நித்தியப்படி ஏற்பட்ட முதல் திருவாராதனமான பொங்கல் நிவேதனமானதும், நம்பெருமாள் புறப்பட்டு, யாகசாலை வாசலில் பலவித புஷ்பங்களை பெரிய அளவில் பரப்பி அதன்மேல் நின்றவாறே கந்தாடை ராமானுசனுக்கும் (தற்போது இந்தப் பட்டத்தை யாரும் அலங்கரிக்கவில்லை), சாத்தாத வைஷ்ணவர்களுக்கும் ஸேவை மரியாதைகளை அனுக்ரஹிப்பார்.
8. நம்பெருமாள் யாகசாலையினுள் எழுந்தருளியதும் திருவாராதனம். இங்கு வேதபாராயணம் பண்ணும்             பாத்தியதையுள்ள தென்கலையார் வந்து பாராயணம் தொடங்கும் போது திருவாராதனம் ஆரம்பிக்கப்படும்.
9. பவித்ரோத்ஸவம் நித்திய திருவாராதன மந்த்ர லோபத்துக்காக ஏற்பட்டதாகையால், இன்றைய                 திருவாராதனத்தின் முடிவில் ஒவ்வொரு அர்க்கிய பாத்தியத்துக்கு ஒரு தீபமாக 360 ஆவ்ருத்தி தீபாராதனம்         நடக்கும்.
10. 360 ஆவ்ருத்தி தீபாராதனம் முடிவதற்கு நாலு மணி நேரத்துக்கு மேலாகும்.
11. அதுவரையிலும் வேதபாராயணம் இடைவிடாமல் நடந்து கொண்டிருக்கும்.
12.அப்போது முதலில் நாராயண உபநிஷத்து தொடங்கிப் பிறகு மற்ற உபநிஷத்துகளும், அச்சித்ர             அஸ்வமேதங்களும் பாராயணம் செய்யப்படும்.
13. திருவாராதனம் ஆனபிறகு  திருமஞ்சனமும்  தளிகை  நிவேதனமும் நடந்து பஞ்சகுண்ட ஹோமம் நடக்கும்.                14. ரக்ஷாபந்தனமாகி உத்ஸவருக்கெதிரே வேதபாராயணத்துடன் பவித்திரப் பிரதிஷ்டையாகும்.                 15. பவித்திரத்தை ஸ்வஸ்திவாசனத்துடன் பெரிய பெருமாளிடம் கொண்டு போய் முதலில் அவருக்கும்,             பிறகு  அனைத்து  மூர்த்திகளுக்கும் திருமார்பு பவித்திரம் சாற்றப்படும்.
16. தீர்த்த விநியோகமானதும் நம்பெருமாள் யாக சாலையிலிருந்து உள்ளே எழுந்தருளுவார்.
17. பிறகு யாகசாலையில் எழுந்தருளப் பண்ணப்படும் திருவரங்க மாளிகையார் உத்ஸவம் முடியும் வரையில்         அவ்விடத்திலேயே எழுந்தருளியிருப்பார்.
18. இரண்டாம் திருநாள். இன்று துவாதசி உதயத்திலேயே பொங்கல் அமுது செய்வித்த பிறகு யாகசாலையில்         வேதபாராயணத்தோடு திருவரங்கமாளிகையாருக்குத் திருவாராதனம் தொடங்கும்.
19. துவாரபூஜை ,மண்டல பூஜைகள் நடக்கும்.
20. பிறகு ஸ்வஸ்தி வாசனத்தோடு பெரியபெருமாளிடம் வந்து நித்தியப்படி ஏற்பட்ட பெரிய அவசரத்             திருவாராதனம் நடைபெறும்.
தொடரும்

உள்ளே இருக்கும் ஒவ்வொரு மூர்த்திக்கும் 360 ஆவ்ருத்தி தீபாராதனம் நடக்கையில் ஒவ்வொரு திருவாராதனத்தின் முடிவிலும் பெரியபெருமாளுக்குத் திருமுடி முதல் திருவடி வரையில் பவித்ரம் சாற்றப்படும். இன்றைய வேதபாராயணமும் முந்தைய தினத்தைப்போலவே. ஆனால், துவாதசியாகையால் அச்சித்ரம், அச்வமேதங்களுக்கு பதிலாக காடகம் பாராயணம் செய்யப்படும்.
மற்றைய மூர்த்திகளுக்கும் பவித்திரம் சாற்றிய பிறகு, தாயார் ஸந்நிதிக்கு மேளதாளத்துடன் பவித்திரம் கொண்டு போய் சாற்றிவரும் வரையில் பெரிய பெருமாளும் நம் பெருமாளும் பல பவித்திரங்களோடு ஜனங்களுக்கு ஸேவை ஸாதித்துக் கொண்டிருப்பார்கள். வனமாலை, அங்கோபாங்கம் முதலிய பவித்திரங்களோடு இன்று பெரிய பெருமாள் சேவை சாதிப்பார். (இந்த சேவைக்குப் பூச்சாண்டி சேவை என்ற பெயர் வழங்குகிறது). கும்பஹாரத்திக்காக திருமடைப் பள்ளியிலிருந்து ‘தட்டி’ வந்ததும் பெரிய அவசரத் தளிகை வரும். பெரியபெருமாள் சாற்றிக் கொண்டிருக்கும் அங்கோ பாங்க பவித்திரங்களைக் களைந்து ஆழ்வாராசார்யாள் முதலிய ஒவ்வொரு ஸந்நிதிக்கும் கொடுத்து, தளிகை அமுது செய்த பிறகு, நம்பெருமாள் பட்டுப் பவித்திரம் சாற்றிக் கொண்டு தோளுக்கினியானில் புறப்பட்டு பவித்ரோத்ஸவ மண்டபத்திற்கு எழுந்தருளுவார்.
இன்று நம்பெருமாள் உபயநாய்ச்சிமார்களுடன் திருச்சிவிகையில் எழுந்தருளி ஸந்நிதி வாசலில் சூர்ணாபிஷேகம் செய்து கொண்டு புறப்பட்டு, கொட்டார வாசலில் நெல்லளவையும் ஸ்ரீரங்கநாய்ச்சியார் ஸந்நிதி வாசலில் திருவந்திக்காப்பும் கண்டருளிப் பிரதக்ஷிணமாய் வந்து உள்ளே எழுந்தருளுவார். உபயநாய்ச்சிமாருடன் எழுந்தருளும் பெரிய ஆஸனமான திருச்சிவிகை பவித்திரோத்ஸவ மண்டபமேறித் திரும்பாதாகையால் இன்று நம்பெருமாள் மண்டபமெழுந்தருளுவதில்லை.
இரவு நம்பெருமாள் உள்ளே எழுந்தருளியதும் பவித்திரங்களைக் களைந்து சயனமூர்த்திக்கு சயன உபசாரம் நடக்கும்.
காலையில் நித்தியப்படி போல நம்பெருமாள் பொங்கல் அமுது செய்து, சந்திரபுஷ்கரிணிக்கு எழுந்தருளித் தீர்த்தவாரி நடத்தி, மண்டபத்தில் திருமஞ்சனம் முதலியவை ஆனதும் புறப்பட்டு உள்ளே எழுந்தளுவார்.
நம்பெருமாள் உள்ளே எழுந்தருளியதும் யாகசாலையிலிருந்து திருவரங்க மாளிகையார் உள்ளே எழுந்தருவார். வாதூல தேசிகரை மஹா வைபவத்தோடு திருமாளிகையிலிருந்து எழுந்தருளப்பண்ணிக் கொண்டு வந்து, ஸந்நிதி வாசலில் அவருக்குப் பவித்திரம் விநியோகம் செய்யப்படும். கோஷ்டிக்கும் பவித்திர விநியோகமாகி, வாதூல தேசிகர் பெரிய பெருமாளுடைய அனைத்துக் கொத்து பரிஜனத்துடனும் புறப்பட்டு, பிரம்மரத மரியாதையாகத் திருமாளிகையெழுந்தருளி சந்தன தாம்பூல மரியாதையான பிறகு, புஷ்கரிணிக்கரையில் குலசேகராழ்வாரால் எப்பொழுதும் மங்களாசாஸனம் பண்ணப்படும். சக்கவர்த்தித் திருமகனுக்கு தன்னை ஆராதித்தற்காகப் பெரிய பெருமாள் தம்முடைய பிரஸாதமான பவித்திரத்தை மேளதாளத்துடன் அனுப்புவார்.

KuvaLakkudi Singam IyengAr

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

ஸ்ரீரங்கஸ்ரீயை வளர்த்த சான்றோர்கள்
1. திருவரங்கம் பெரியகோயிலோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர் குவளகுடி சிங்கமய்யங்கார் ஸ்வாமி.
2. இவர் கி.பி. 1580ஆம் ஆண்டு மே மாதம் (ஸாதாரண வருஷம்-வைகாசி மாதம்) இவர் திருக்கச்சிக்கு அண்மையில் உள்ள குவளகடி என்னும் ஊரில் பிறந்தார்.
3. தன்னுடைய சொத்துக்களை மிகுந்த கவனத்துடன் மேற்பார்வையிட்டு பன்மடங்காகப் பெருக்கியதோடு மட்டுமல்லாமல் அதிலிருந்து கிடைத்த வருமானம் அனைத்தையும் ஸ்ரீரங்கநாதனுக்குத் திருவாபரணங்கள் ஸமர்ப்பித்திடவும், திருக்கோயில் திருப்பணிகளை மேற்கொண்டிடவும், கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்திடவும், வேதம் மற்றும் ஆகமங்கள் தழைத்தோங்கிட பாடசாலை ஒன்றை நிறுவிடுவதற்கும் செலவு செய்தார்.
4. இவர் தம்முடைய சொந்தப்பணத்தைக் கொண்டு கீழ்க்கண்ட கைங்கர்யங்களை மேற்கொண்டார்.
5. 1)ரங்க விமான கலசங்களுக்கு தங்கமுலாம் பூச, 2)ரத்தின அங்கியைப் புதுப்பிக்க, 3)பெரிய பெருமாளுடைய முழங்கைக் கவசங்களைப் புதுப்பிக்க, 4) நித்தியப்படி கிரீடத்தில் வைத்திழைத்த 14 வைரம், 5)முத்தங்கியைப் பிரித்துத் தைக்கக் கூலி, 6) நாச்சியாருக்கு தங்கச்சங்கிலி, 7)நாச்சியார் ஸிம்மாஸனம் புதுப்பிக்க, 8) அரவணைப் பிரஸாதத்துக்கு, 9) ஸந்நிதி மராமத்துக்கு, 10)பெரியபெருமாளுக்கு நிலம் வாங்க, 11)சந்திர புஷ்கரிணி ஜீர்ணோத்தாரணத்துக்கு 12) பெரியபெருமாளுக்கு சாற்றும் தைலத்திற்கு 13) ரேவதி உத்ஸவத்துக்கு 14) பாடசாலைக்காக. இதற்காக செலவு செய்த பணம் 2,03,000 ரூபாய்.
6. சிங்கமய்யங்கார் முன்னின்று பல தனிகர்களிடம் வசூல் செய்து கீழ்க்கண்ட கைங்கர்யங்களை மேற் கொண்டார். 1)திருமணத்தூணைப் புதுப்பிக்க வானமாமலை ஜீயரிடம் 2) யானைவாஹனம் புதுப்பிக்க ஜயராம் பிள்ளையிடம் 3)விஜயரங்க சொக்கநாத நாயக்கர் குடும்ப தந்த பொம்மைகளைப் புதுப்பிக்க ஸப்ஜட்ஜ் சடகோப நாயக்கரிடம் 4) வெள்ளிப்பல்லக்குக்காக கத்வால் ராணியிடம் 5) நாச்சியார் ஸிம்மா ஸனத்துக்கு ஜனார்த்தன ராமானுஜ தாஸனிடம். 6)ரத்தின அங்கிக்காக பலரிடம் வசூலித்தது 7) முத்தங்கிக்காக பலரிடம் வசூலித்தது 8) பெரியபெருமாளுக்கு நிலம் வாங்க பம்பாயில் வசூலித்தது. இந்த வகையில் 1, 25,000 ரூபாய் சிங்கமைய்யங்காரால் வசூலிக்கப்பட்டது.
7. சிங்கமய்யங்கார் ஸ்வாமியிடம் பக்தியும் கைங்கரிய ருசியுமே குடிகொண்டிருந்தன.
8. இவருக்கு அருகிலேயே வாஸம் கொண்டிருந்து ரங்கநாதனுக்கு ரத்தினம், தங்கம், பணம்-முதலியன யாசித்து பாண்டியன் கொண்டை, மகர கண்டி, ராஜமுடி, முதலியன ஸமர்ப்பித்து சிங்கமய்யங்காரின் 26ஆவது வயதில் அதாவது தாது வருஷத்தில் ஸித்தியடைந்த அல்லூரி ஸ்ரீவேங்கடாத்ரி ராமாநுஜ ஜீயர் ஒரு விசித்திரமான விரதத்தைக் கைக்கொண்டு வந்தார். பெருமாளுக்கு ஸமர்ப்பிக்க திருவாபரணங்கள் செய்வதற்கு குறைந்தது ஒரு நாளைக்கு 10ரூபாய் கிடைக்கவில்லையானால் அன்றைய தினம் பட்டினி கிடந்து வந்தார்.
9. அவ்வாறு அவர் பட்டினி கிடக்கக்கூடாது என்பதற்காக சிங்கமய்யங்கார் ஸ்வாமி 10ரூபாயை ஒவ்வொரு நாளும் அவருக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். இதன் விளைவாக வேங்கடாத்ரி ஸ்வாமியின் கைங்கர்ய ருசியே சிங்கமய்யங்காருக்கு முதிர்ந்துவிட்டது.
10. சிங்கமய்யங்கார் 1933ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 16ஆம் நாள் தமது 84ஆவது வயதில் பரமபதித்தார்.
11. சிங்கமய்யங்கார் ஸ்வாமியின் ஒரேபுத்திரரும், கோயில் தர்மகர்த்தாவுமான குப்புஸ்வாமி அய்யங்கார் நெடுநாள் முன்னர் பரமபதித்தபடியால் அவருடைய குமாரர்கள் ஸ்ரீமான் சிங்கமய்யங்கார் M.ஃ.இ.கஸ்தூரிரங்க அய்யங்கார் மாஜி தர்மகர்த்தா, ஸ்ரீநிவாஸ அய்யங்கார் ஏணிண.Mச்ஞ்டிண்tணூச்tஞு மூவரும் சிங்கமய்யங்காருடைய தர்ம சொத்துக்களைப் பரிபாலித்து வந்தனர்.
12. தர்மகர்த்தா பொறுப்பு வகிக்கும்போது இறப்பவருக்கு மட்டும் வழக்கமாய் அனுப்பப்படும் யானைமேல் அறுவாணம் என்ற உத்தமமான மரியாதை சிங்கமய்யங்கார் ஸ்வாமிக்கு அனுப்பப்பட்டது.
13. அவர் முன்பு தர்மகர்த்தாவாயிருந்தார் என்ற காரணத்திற்காக அன்று யானைமேல் அறுவாணம் அனுப்பப்படவில்லை. ஆனால் அவர் பெருமாளுக்குச் செய்த அளவற்ற கைங்கர்யம் ஒன்றை மட்டுமே நினைத்து அந்த மரியாதை அன்று அனுப்பப்பட்டது. அதிகாரத்தினால் கிடைக்கும் உத்தமமான மரியாதையை முதல் முதலாக சிங்கமய்யங்கார் ஸ்வாமி ஒருவரே பெருமாளுக்கு ஆச்சரியமான பல கைங்கர்யங்களைச் செய்து பெற்றவராகிறார்.
14. கீழைச் சித்திரை வீதியில் புகழ்பெற்ற கு.சி. பாடசாலை அமைந்துள்ளது. நூற்றுக்கணக்கான வித்யார்த்திகள் வேதம் மற்றும் ஆகமங்களில் பயிற்சி பெற்று வந்தனர். கிடைத்தற்கரிய புத்தகங்கள் பல கு.சி. பாடசாலை நூலகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
15. அவர் பிறந்த வைகாசி மாதத்தில் அவருடைய நினைவுகளைச் சுமந்து செல்வோமாக.